It records a gift of money (one accu) for burning a twilight lamp.குறுப்பு நாட்டுக் கூடூர் லேனாளர் பனங்காடை குல சொக்கன் கொற்றன் இறைவனுக்குச் சந்தியா தீபம் வைக்க பழஞ்சலாகை அச்சு ஒன்று கொடுத்தார்.
It records a gift of village Theraiyur alias Kulothungachola nallur as devadana to the temple, for rituals and renovation works.இறைவனுக்கு அமுதுபடி. சாத்துப்படி, பூச்சுப்படி திருப்பணிக்காக அரசன் இந்நாட்டுத் தேரையூர் ஆன குலோத்துங்க சோழநல்லூரில் குடியேற்றித் தேவதானமாகக் கொடுத்தார்.
It records a gift of taxes from Vijayamangalam, Tingalur, and Kunrathur by Ur assembly and officials.காலிங்கராயர் என்ற அலுவலர் காலத்தில் குறுப்பு நாட்டு ஊரும் ஊராளிகளும் ஒரு ஊர் வரிகள் அனைத்தும் கோயிலுக்கு அளிக்கும் வண்ணம் திருவிடையாட்ட இறையிலியாக அளிக்கப்பட்டது. விசயமங்கலம், திங்களூர், குன்னத்தூர் கணக்கு அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
It records a gift of money (13th century A. D. ) by an individual from Eralapuram in Kerala for burning twilight lamp.மலைமண்டலத்து ஏறாளபுரத்து வியாபாரி உமையன் காற்கரையான் கருணாலை என்பவர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாளிடம் பன்னிரண்டு பணம் கொடுத்து இறைவன் திரு முன்பு தன் பெயரில் ஒரு சந்தியா தீபம் எரிக்க வேண்டிக் கொண்டார்.
It records a gift of money by an individual from Visaiyan Kudi from Karunkudi nadu in Pandimandalam for buring twilight lamp.பாண்டி மண்டலத்துக் கருங்குடி நாட்டு விசையங்குடி அரையன் சூரிய தேவனான குவலயத்தரையன் இறைவன் திருமுன்பு சந்தியா தீபம் வைக்க பன்னிரண்டு பணம் கொடுத்தார்.
It records a gift of paddy by saba of Vikrama chola chadhurvedi mangalam to Lakshminarayana perumal temple for conducting Srijayanthi fes - ti in the same temple.வீரசோழ வளநாட்டு அருளாளநாதன் திருவிடையாட்டம் முகுந்தனூரான விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் குன்னத்தூர்க் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீஜெயந்தி கொண்டாடவும், அந்நாளுக்கு உண்டான அமுதபடிக்கும். வெஞ்சனங்களுக்கும் ஆண்டுதோறும் எட்டுக்கல் நெல் கொடுப்பதாகவும் குன்னத்தூர் இறைவன் திருமுன் ஒப்புக்கொண்டனர்.
It records about loan (200 phanas) received by saba of Vikrama chola sathurvethimangalam in Virachola valanadu from temple. The saba had agreed to remmit thirteen Kalams and twenty six phanas as interest to the temple per year in two instalments. It is an interesting inscription for studying saba temple relation.வீரசோழி வளநாட்டு முகுந்தனூரான விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தங்களுர் அணைக்கு கல்லிட்டுப் பழுது பார்க்க குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பண்டாரத்தில் 200 பணம் கடன் பெற்றனர். அதற்கு 13 கலம் நெல்லும் 26 பணமும் வட்டியாகத் தந்நதனர். அதை வருடத்தில் இரு தவணைகளாகச் செலுத்தினர். அதன்மூலம் இறைவன் திருநட்சத்திரமான திருவாதிரையில் தீர்த்தவிழா எடுத்துப் பதினாறு வைணவர்கட்குச் சோறிட வேண்டும் என்றும் கூறினர். வட்டியை விளையிலும், விளையாது ஒழியிலும் ஊர் கேடு போனாலும் அளிக்க ஒப்புக் கொண்டனர்.
It records the order of King which directed the temple priests, temple officers and nambimar to part one third of their income to the uvaccar.இக்கல்வெட்டுத் துண்டுகள் கீழிருந்து மேல் நோக்கிப் படிக்கும் வண்ணம் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அறச்சலூர் அறச்சாலையம்மன் கோயிலிலும், திங்களூர் சந்திராபுரீசுவரர் மேனியிலிலும் வெட்டப்பட்டுள்ளன. எல்லாக் கோயில்களிலும் இறைபணியாற்றும் பட்டர், தானத்தார், நம்பிமார் ஆகியோர் தம் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு உவச்சர்கட்கு அளிக்க சண்டிகேசுவரர் ஓலையாக அளித்த கல்வெட்டு சிதைந்துள்ளது. விசயமங்கலம், குன்னத்தூர்க் கோயில்களிலும் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
-முப்புறத்துச் சேனாபதி ஆழ்வானான செல்வ நம்பி குலோத்துங்க சோழ விண்ணகரர் கோயிலில் வழிபாடுகள் நடக்கவும் அவன் பிறந்தநாளில் திருவிழா நடக்கவும் செலவுகளுக்காக 40 கழஞ்சு பொன் மூலதனம் கொடுத்தமை. முகத்தல் அளவின் பெயர் இறைமரக்கால் என்று சுட்டப்படுகிறது. பதினெட்டு நாட்டு வைஷ்ணவர்கள் அறம் காப்பவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர்.
-கல்வெட்டு இடையில் பல வரிகள் அழிந்து விட்டது. உலகவிடங்கம் உலகீசுவரருக்கு இறையிலி நிலம் அளித்து அதன் நான்கு எல்லைகளிலும் திரிசூலக் கல் நாட்டிய விபரம் கூறப்படுகிறது.
-கொங்குச் சோழ அரசன் ஒருவன் நேரடியாகக் கொடுத்த ஓலை. முத்தூர் பார்ப்பாரச் சான்றார் இறையாகக் கோயிலுக்குக் கம்பு கொடுத்து வந்தனர். அரசன் அரிசிக்குப் பதிலாக குறிப்பிட்ட அளவு சோழியம் என்னும் நாழியால் அளந்து கம்பு கொடுக்க ஓலை கொடுத்தான் எனத் தொகிறது. சான்றாரில் உயர்ந்தவர் பார்ப்பாரச் சான்றார் என்பர். ஓலை அளித்த அரசன் கொங்குத் சோழனாகக் கொள்ளலாம்.
-துண்டுக் கல்வெட்டு. இறைவனுடைய திருவமுது படிக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இதில் கண்ணிமங்கலம் என்று குறிக்கப்படும் ஊர் இதே பெயரில் இக்கோயிலுக்குத் தெற்கில் சுமார் 1 கி. மீ. தொலைவில் இன்றும் உள்ளது.
-கல்வெட்டின் இறுதியில் ஒரு சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனந்தூர் இறைவனுக்குத் துறுமூருடையாந் எடுத்தான் என்பவன் ஒரு நொந்தா விளக்குக்கு சந்திராதித்தவல் வரை எரிய உரி எண்ணையும், சிவலோகக்காணியும் கொடுத்ததைக் குறிக்கிறது.
-துண்டுக் கல்வெட்டு. ஒரு ஊரை பதின் மூன்று பங்கிட்டு பிராமணர், இறைவன், பெருமாள் மற்றும் சிலருக்கு கொடுத்ததையும், பொன்பரப்பின சதுர்வேதி மங்கலத்தையும் குறிக்கிறது.
-தாத்திரட்டியார் என்பவர் தாழை நத்தத்தில் இருந்த கோயில் இறை வற்கும், இறைவிக்கும் திருநொந்தா விளக்கு எரிக்கவும், நைவேத்தியஞ் செய்யவும் அவ்வூரில் நஞ்சை புஞ்சை நிலங்களைத் தானமாக விட்டதைக் குறிக்கின்றது. இன்றும் இவ்வூர் புட்டிரெட்டிப்பட்டித் தொடர்வண்டி நிலையத்துக்கு அண்மையில் தாளநத்தம் என்ற பெயரால் வழங்கி வருகின்றது. இக்கோயில் கவனிப் பாரற்று சிதைந்து விட்டமையால் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ளவற்றை யெல்லாம் பெயர்த்தெடுத்துச் சென்று, சுமார் 1. கி. மீ. தொலைவில் உள்ள புட்டி ரெட்டிப் பட்டியில் அதே நிலையில் கட்டிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
-இக்கல்வெட்டு இரண்டாக உடைந்து, ஒரு பகுதி மட்டுமே இப்பாழுது கிடைத் துள்ளது. இரு பகுதிகளும் இணைந்திருந்த பொழுது நடுவில் வட்டமான ஒரு பெருந்துளை இருந்திருக்க வேண்டும். வன்னெஞ்சப்பெருமாள் என்ற இறைவன் பெயர் குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டில் வீரராசேந்திரனின் 17-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளது. ஆயின் இவன் முதலாம் இராசேந்திரனுடைய மகன் இராசகேசரி வீரராசேந்திரனல்லன். ஏனெனில் இவன் கி. பி. 1063-1070 ஆம் ஆண்டுவரை மொத்தம் ஏழு ஆண்டுகளே ஆண்டுள்ளான். இக்கல்வெட்டில் 17-ஆவது ஆட்சி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. சோழ மரபில் இராசகேசரி வீரராசேந்திரன் மட்டுமன்றி வீரராசேந்திரன் என்ற பெயர். மூன்றாம் குலோத்துங்கனுக்கும் வழங்கி வந்தமை அவனுடைய 2. -ஆவது முதல் 36-ஆம் ஆட்சி ஆண்டு வரை உள்ள இவனது கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. (தெ. இ. கல்வெட்டுக்கள் பகுதி VII No. 86, 323-1911 பார்க்க). எனவே இங்குக் குறிக்கப்பட்டுள்ள வீரராசேந்திரன் மூன்றாங் குலோத்துங்கனாகவே இருத்தல் வேண்டும்
-காரிமங்கலத்தைச் சேர்ந்த கெண்டையன் மலையன் என்பவன் சிவநீசுவரமுடைய இறைவற்கு ஒரு சந்தி விளக்கெரிக்க ஒரு பொன்னும், கானுழாத் உடையான் ஒரு ாக்கெரிக்க ஒரு பொன்னும், யாசக வேளான் மூன்று சந்தி விளக்கெரிக்க ஆறு பசுவும், பிடவாரியர் இரண்டு சந்தி விளக்கு எரிக்க ஆறு பசுவும் கொடுத்து உள்ளனர். ஆக ஏழு சந்தி விளக்குகள் எரிக்கக் கொடுத்த இரண்டு பொன்னை யும். 12 பசுக்களையும் இக்கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் தில்லைநாயகப் பட்டன் மூவாயிரத்தொருவன் ஏற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை ஏரிப்பதாக ஒப்புக் கொண்டதை இக்கல்வெட்டு குறிக்கின்றது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட காரிமங்கலம் இன்றும் அதே பெயரில் தருமபுரி, கிருட்டிணகிரி நெடுஞ்சாலையில், இரு பேரூர்கட்கும் இடையில் சமதூரத்தில் உள்ளது.
-இறைவியின் அமுது படிக்காகக் கண்டசச் செட்டியார் என்பவர் கானபள்ளி என்ற ஊரில் மழவராயப் புத்தேரியின் முதல் மடையில் ஒரு கண்டகம் விளை நிலத்தைத் தானமாக விட்டதைக் குறிக்கின்றது.
-போசள மன்னன் வீரவிஸ்வநாதனின் 2-வது ஆட்சி ஆண்டில் உத்தமசோழ கங்காதராயன் என்பவன் நாகையன்பள்ளியான காலிங்கராயச் சதுப்பேதி மங்கலத்தில் உள்ள இறைவனுக்கு மன்னன் வீரவிஸ்வநாதனுக்கும், இவனுக்கும் நல்வாழ்வு வேண்டி கொடுத்த நிலக் கொடையைக் குறிக்கிறது. இறைவனின் பெயர் தேசி நாயகர் என்று குறிக்கப்படுகிறது.