Skip to main content

1146 results found

திருப்பூர்>காங்கேயம்>கத்தாங்கண்ணி
திருப்பூர் முப்புறத்துச் சேனாபதி ஆழ்வானான செல்வ நம்பி குலோத்துங்க சோழ விண்ணகரர் கோயிலில் வழிபாடுகள் நடக்கவும் அவன் பிறந்தநாளில் திருவிழா நடக்கவும் செலவுகளுக்காக 40 கழஞ்சு பொன் மூலதனம் கொடுத்தமை. முகத்தல் அளவின் பெயர் இறைமரக்கால் என்று சுட்டப்படுகிறது. பதினெட்டு நாட்டு வைஷ்ணவர்கள் அறம் காப்பவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு>பவானி>ஒலகடம்
ஈரோடு கல்வெட்டு இடையில் பல வரிகள் அழிந்து விட்டது. உலகவிடங்கம் உலகீசுவரருக்கு இறையிலி நிலம் அளித்து அதன் நான்கு எல்லைகளிலும் திரிசூலக் கல் நாட்டிய விபரம் கூறப்படுகிறது.
திருப்பூர்>காங்கேயம்>முத்தூர்
திருப்பூர் கொங்குச் சோழ அரசன் ஒருவன் நேரடியாகக் கொடுத்த ஓலை. முத்தூர் பார்ப்பாரச் சான்றார் இறையாகக் கோயிலுக்குக் கம்பு கொடுத்து வந்தனர். அரசன் அரிசிக்குப் பதிலாக குறிப்பிட்ட அளவு சோழியம் என்னும் நாழியால் அளந்து கம்பு கொடுக்க ஓலை கொடுத்தான் எனத் தொகிறது. சான்றாரில் உயர்ந்தவர் பார்ப்பாரச் சான்றார் என்பர். ஓலை அளித்த அரசன் கொங்குத் சோழனாகக் கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி>ஓசூர்>அச்சேந்திரம்
கிருஷ்ணகிரி துண்டுக் கல்வெட்டு. இறைவனுடைய திருவமுது படிக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இதில் கண்ணிமங்கலம் என்று குறிக்கப்படும் ஊர் இதே பெயரில் இக்கோயிலுக்குத் தெற்கில் சுமார் 1 கி. மீ. தொலைவில் இன்றும் உள்ளது.
கிருஷ்ணகிரி>ஊத்தங்கரை>ஆனந்தூர்
கிருஷ்ணகிரி கல்வெட்டின் இறுதியில் ஒரு சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனந்தூர் இறைவனுக்குத் துறுமூருடையாந் எடுத்தான் என்பவன் ஒரு நொந்தா விளக்குக்கு சந்திராதித்தவல் வரை எரிய உரி எண்ணையும், சிவலோகக்காணியும் கொடுத்ததைக் குறிக்கிறது.
தர்மபுரி>பாப்பிரெட்டிப்பட்டி>வடகரைக் கோட்டை
தர்மபுரி துண்டுக் கல்வெட்டு. ஒரு ஊரை பதின் மூன்று பங்கிட்டு பிராமணர், இறைவன், பெருமாள் மற்றும் சிலருக்கு கொடுத்ததையும், பொன்பரப்பின சதுர்வேதி மங்கலத்தையும் குறிக்கிறது.
தர்மபுரி>பாப்பிரெட்டிப்பட்டி>புட்டிரெட்டிப்பட்டி
தர்மபுரி தாத்திரட்டியார் என்பவர் தாழை நத்தத்தில் இருந்த கோயில் இறை வற்கும், இறைவிக்கும் திருநொந்தா விளக்கு எரிக்கவும், நைவேத்தியஞ் செய்யவும் அவ்வூரில் நஞ்சை புஞ்சை நிலங்களைத் தானமாக விட்டதைக் குறிக்கின்றது. இன்றும் இவ்வூர் புட்டிரெட்டிப்பட்டித் தொடர்வண்டி நிலையத்துக்கு அண்மையில் தாளநத்தம் என்ற பெயரால் வழங்கி வருகின்றது. இக்கோயில் கவனிப் பாரற்று சிதைந்து விட்டமையால் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ளவற்றை யெல்லாம் பெயர்த்தெடுத்துச் சென்று, சுமார் 1. கி. மீ. தொலைவில் உள்ள புட்டி ரெட்டிப் பட்டியில் அதே நிலையில் கட்டிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தர்மபுரி>அரூர்>சூரநத்தம்
தர்மபுரி இக்கல்வெட்டு இரண்டாக உடைந்து, ஒரு பகுதி மட்டுமே இப்பாழுது கிடைத் துள்ளது. இரு பகுதிகளும் இணைந்திருந்த பொழுது நடுவில் வட்டமான ஒரு பெருந்துளை இருந்திருக்க வேண்டும். வன்னெஞ்சப்பெருமாள் என்ற இறைவன் பெயர் குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டில் வீரராசேந்திரனின் 17-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளது. ஆயின் இவன் முதலாம் இராசேந்திரனுடைய மகன் இராசகேசரி வீரராசேந்திரனல்லன். ஏனெனில் இவன் கி. பி. 1063-1070 ஆம் ஆண்டுவரை மொத்தம் ஏழு ஆண்டுகளே ஆண்டுள்ளான். இக்கல்வெட்டில் 17-ஆவது ஆட்சி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. சோழ மரபில் இராசகேசரி வீரராசேந்திரன் மட்டுமன்றி வீரராசேந்திரன் என்ற பெயர். மூன்றாம் குலோத்துங்கனுக்கும் வழங்கி வந்தமை அவனுடைய 2. -ஆவது முதல் 36-ஆம் ஆட்சி ஆண்டு வரை உள்ள இவனது கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. (தெ. இ. கல்வெட்டுக்கள் பகுதி VII No. 86, 323-1911 பார்க்க). எனவே இங்குக் குறிக்கப்பட்டுள்ள வீரராசேந்திரன் மூன்றாங் குலோத்துங்கனாகவே இருத்தல் வேண்டும்
தர்மபுரி>பாப்பிரெட்டிப்பட்டி>சிந்தல்பாடி
தர்மபுரி காரிமங்கலத்தைச் சேர்ந்த கெண்டையன் மலையன் என்பவன் சிவநீசுவரமுடைய இறைவற்கு ஒரு சந்தி விளக்கெரிக்க ஒரு பொன்னும், கானுழாத் உடையான் ஒரு ாக்கெரிக்க ஒரு பொன்னும், யாசக வேளான் மூன்று சந்தி விளக்கெரிக்க ஆறு பசுவும், பிடவாரியர் இரண்டு சந்தி விளக்கு எரிக்க ஆறு பசுவும் கொடுத்து உள்ளனர். ஆக ஏழு சந்தி விளக்குகள் எரிக்கக் கொடுத்த இரண்டு பொன்னை யும். 12 பசுக்களையும் இக்கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் தில்லைநாயகப் பட்டன் மூவாயிரத்தொருவன் ஏற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை ஏரிப்பதாக ஒப்புக் கொண்டதை இக்கல்வெட்டு குறிக்கின்றது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட காரிமங்கலம் இன்றும் அதே பெயரில் தருமபுரி, கிருட்டிணகிரி நெடுஞ்சாலையில், இரு பேரூர்கட்கும் இடையில் சமதூரத்தில் உள்ளது.
தர்மபுரி>பாப்பிரெட்டிப்பட்டி>சிந்தல்பாடி
தர்மபுரி இறைவியின் அமுது படிக்காகக் கண்டசச் செட்டியார் என்பவர் கானபள்ளி என்ற ஊரில் மழவராயப் புத்தேரியின் முதல் மடையில் ஒரு கண்டகம் விளை நிலத்தைத் தானமாக விட்டதைக் குறிக்கின்றது.
தர்மபுரி>காரிமங்கலம்>கம்பைநல்லூர்
தர்மபுரி மதுராந்தக வீரநுளம்பன் இராசநாராயண பைரவன் என்பான் போசள அரசன் வீரவிஸ்வநாதன் நலனுக்கும், தன் நலனுக்குமாக புறமலை நாட்டுக் கடம்பர் பள்ளியில் உள்ள நன்செய் புன்செய் நிலங்களைச் சர்வமானியமாக நாகையன் பள்ளியான காலிங்கராயச் சதுர்வேதி மங்கலத்து இறைவன் தேசிநாயனார்க்குக் கொடுத்ததைக் குறிகின்றது.
தர்மபுரி>காரிமங்கலம்>கம்பைநல்லூர்
தர்மபுரி போசள மன்னன் வீரவிஸ்வநாதனின் 2-வது ஆட்சி ஆண்டில் உத்தமசோழ கங்காதராயன் என்பவன் நாகையன்பள்ளியான காலிங்கராயச் சதுப்பேதி மங்கலத்தில் உள்ள இறைவனுக்கு மன்னன் வீரவிஸ்வநாதனுக்கும், இவனுக்கும் நல்வாழ்வு வேண்டி கொடுத்த நிலக் கொடையைக் குறிக்கிறது. இறைவனின் பெயர் தேசி நாயகர் என்று குறிக்கப்படுகிறது.
தர்மபுரி>பாப்பிரெட்டிப்பட்டி>அலமேலுபுரம்
தர்மபுரி நுளம்ப மன்னன் பெயரால் இறையமன் என்பான் உருவாக்கிய செக்கு.
கோயம்புத்தூர்>சூலூர்>செலக்கரிச்சல்
கோயம்புத்தூர் ஊரும் ஊராளிகளும் வேண்டியதற்கிணங்க இறைவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு குளம் மற்றும் அதன் பாசன நிலங்களுக்கு வரி நீக்கிக் கொடுத்த ஆணையாக இருக்க வேண்டும். அக்குளம் வெள்ளலூருக்கு போகும் வழியில் இருந்ததாகவும் தெரிகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளது.
கோயம்புத்தூர்>சூலூர்>செலக்கரிச்சல்
கோயம்புத்தூர் மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. வேசாணால்யார். என்பவர் மனைகுழி இருபத்தொன்று விலைக்கு வாங்கியது, திருப்பாம்புரமுடையார் கோயில் இறையிலி மனைக்குழி ஆகையால் அம்மனைக்குப் பதிலாக வேறு இடத்தில் திருவீதியின் நடுவில் இருபத்தோறு குழி இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.
கோயம்புத்தூர்>சூலூர்>செலக்கரிச்சல்
கோயம்புத்தூர் ஆண்டவன் என்பான் நிலைபெற்ற கூத்தர் முன்பு சந்தி விளக்கு எரிக்க பழஞ்சலாகை அச்சுக் காசு கொடை கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. கூத்தர் என்றால் ஆடுபவர் என்று பொருள். ஆனால் இங்கு இறைவனை நிலைபெற்ற கூத்தர் என்று அழைத்துள்ளது அழகிய மரபு.
திருப்பூர்>அவிநாசி>கொடுவாய்
திருப்பூர் ஒதாளர் குல சின்னைய கவுண்டர் அகமுடையாள் சிவகாமியம்மாள் குறட்டு வாசல் வடபக்கத்தை இறையருளால் உபயமாகக் கட்டினார்.
கோயம்புத்தூர்>அன்னூர்>கோவில்பாளைம்
கோயம்புத்தூர் வடபரிசார நாட்டுக் கவையந்புத்தார் உளர், ஊராளிகள் காலாகாலீஸ்வரர்க்கு கால்பாடு ஆகிய கடிகூவல் ஆன வானவன் மாதேவி நல்லூரை கொடையளித்தல். எனவே மேற்படி ஊரிலிருந்து வரும் இறை, புரவு, சிற்றாயம், தெண்டகுற்றம் முதலான வரிகள் கோவிலுக்குச் சேர்ந்தன.
கோயம்புத்தூர்>அன்னூர்>இடிகரை
கோயம்புத்தூர் கல்வெட்டு சிதைந்துள்ளது. எண்பது பணம் கொடையாக அளிக்கப்பெற்ற செய்தி கூறப்பெறுகின்றது. மாளிகைப் பிள்ளையார் என்ற இறைவன் பெயர் குறிப் பிடத்தக்கது.
கோயம்புத்தூர்>பேரூர்>பேரூர்
கோயம்புத்தூர் குணியம்புத்தூர் ஊராரும், நகரத்தாரும் மடப்புற இறையிலியாக நிலத்தை அலித்துள்ளனர். சோழ மண்டலத்து நித்தவினோத வளநாட்டு நெடுவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஆளவந்தான் தன் தந்தை பெயரால் கதப்பிள்ளை வில்லவராயன் திருமடம் என்றொரு மடத்தை நிறுவிய செய்தி கூறப்பெறுகின்றது.