Skip to main content

1128 results found

தருமபுரி>அரூர்>அலமேலுபுரம்
- நுளம்ப மன்னன் பெயரால் இறையமன் என்பான் உருவாக்கிய செக்கு.
கோயம்புத்தூர்>பல்லடம்>செலக்கரிச்சல்
Seems to refer king s or for tax exemption for the lands under the irrigation of a tank on a requestion by ur assembly and ur chiefs. ஊரும் ஊராளிகளும் வேண்டியதற்கிணங்க இறைவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு குளம் மற்றும் அதன் பாசன நிலங்களுக்கு வரி நீக்கிக் கொடுத்த ஆணையாக இருக்க வேண்டும். அக்குளம் வெள்ளலூருக்கு போகும் வழியில் இருந்ததாகவும் தெரிகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளது.
கோயம்புத்தூர்>பல்லடம்>செலக்கரிச்சல்
Gift of Palajalakai for a twilight lamp infront nilai perra Kuttar. ஆண்டவன் என்பான் நிலைபெற்ற கூத்தர் முன்பு சந்தி விளக்கு எரிக்க பழஞ்சலாகை அச்சுக் காசு கொடை கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது. கூத்தர் என்றால் ஆடுபவர் என்று பொருள். ஆனால் இங்கு இறைவனை நிலைபெற்ற கூத்தர் என்று அழைத்துள்ளது அழகிய மரபு.
கோயம்புத்தூர்>திருப்பூர்>கொடுவாய்
Gift of inner kuradu of vada parisaram by Chinnaiya gounder of Goundampalayam. ஒதாளர் குல சின்னைய கவுண்டர் அகமுடையாள் சிவகாமியம்மாள் குறட்டு வாசல் வடபக்கத்தை இறையருளால் உபயமாகக் கட்டினார்.
கோயம்புத்தூர்>கோயம்பத்தூர்_வடக்கு>கோவில்பாளைம்
Records the gift of Vanavan madevei nallura hamlet of Kavaiyan puttur by village assembly and officials to the Ka/akala devar temple. வடபரிசார நாட்டுக் கவையந்புத்தார் உளர், ஊராளிகள் காலாகாலீஸ்வரர்க்கு கால்பாடு ஆகிய கடிகூவல் ஆன வானவன் மாதேவி நல்லூரை கொடையளித்தல். எனவே மேற்படி ஊரிலிருந்து வரும் இறை, புரவு, சிற்றாயம், தெண்டகுற்றம் முதலான வரிகள் கோவிலுக்குச் சேர்ந்தன.
கோயம்புத்தூர்>கோயம்பத்தூர்_வடக்கு>இடிகரை
Records a gift of money (40 Panam) by a siva brahamana. Another individual donated 40 Panam. These two amounts (80 panam) were to be utilized for the worship of the image of Tirukkalmalikai Pillaiyarin the temple. The gift was received by one Tirunattan Agattiswaramudaiyan alias cittrameli battan. கல்வெட்டு சிதைந்துள்ளது. எண்பது பணம் கொடையாக அளிக்கப்பெற்ற செய்தி கூறப்பெறுகின்றது. மாளிகைப் பிள்ளையார் என்ற இறைவன் பெயர் குறிப் பிடத்தக்கது.
கோயம்புத்தூர்>கோயம்பத்தூர்_தெற்கு>பேரூர்
Records a gift of land by Alavanta nayanar from Netuvayil in Nittavinota valanatu a sub - division of cola mandalam to the mutt, which was created by him. The mutt was named after his father as Villavarayan madam. Also mentions Melai madam in Vada Ciraku and Uyyakkonda cola mannarai. குணியம்புத்தூர் ஊராரும், நகரத்தாரும் மடப்புற இறையிலியாக நிலத்தை அலித்துள்ளனர். சோழ மண்டலத்து நித்தவினோத வளநாட்டு நெடுவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஆளவந்தான் தன் தந்தை பெயரால் கதப்பிள்ளை வில்லவராயன் திருமடம் என்றொரு மடத்தை நிறுவிய செய்தி கூறப்பெறுகின்றது.
கோயம்புத்தூர்>கோயம்பத்தூர்_தெற்கு>கோயம்பத்தூர்
Records a gift of an accu by Tolam pillan alias Thirugnacampantan from vellalan maliyarcian to the Sankiswara mudaiyar temple. வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளன் ஆன திருஞானசம்பந்தன் என்பான் சங்€சுவரரர் கோயிலில் திருக்கார்த்திகை நாளில் இறைவன் எழுந்தருளவும், திருஅமுதுக்கும் அச்சுக்காசுகள் கொடையளித்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது.
கோயம்புத்தூர்>உடுமலைப்பேட்டை>கடத்தூர்
Records a gift of land by Abimanappallavaraiyan, one of the cammander - in - chiefs posted at the fort, for offerings to the Virada mutitta pillaiyar வீரராசேந்திர சேனாபதி அபிமான. ராமப்பலலவரையன் கோட்டையின் தெற்கிலிருந்து விரதம் முடித்த பிள்ளையாருக்கு அமுதுபடிக்காக அரசனின் கருவூலத்தில் வைப்புநிதியாகப் பொன் வைத்ததால நான்கெலலைக்குட்பட்ட கொக்குக் காணி விதை நிலம் ஒரு கலத்தை இவ்வரசன் இறையிலி முற்றூட்டாக விட்டான்.
கோயம்புத்தூர்>உடுமலைப்பேட்டை>கடத்தூர்
Records a gift of land by Thiru buvanasigngadevan in gratitude of curing his discase of preamega (diabitis) by the god. It gives details about the treacherous Officials and confisication of their lands. Since Udaiyaticcadevan ran away to Vadakongu which was the territory of the enemies. விக்கிரமசோழன் ஆட்சியின் போது, திரிபுவன சிங்கன் என்பவனுக்குப் பிரமேகம் என்ற சர்க்கரை நோய் வந்து கடத்தூர் இறைவன் அருளால் நீங்கினமையும், உதயாதிச்சதேவந் துரோகியாய் ஓடிய செய்துயும், சீதனமாக நிலம் வழங்கிய செய்தியும் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. இரு அதிகாரிகள் ஒப்பமிட்டுள்ளனர்.
கோயம்புத்தூர்>உடுமலைப்பேட்டை>கடத்தூர்
Records a gift of itaicalakaiaccu by Kumaran alias Kananciyappal\ avaraiyan given in continuation of old one. இறைவனுக்கு அப்ப அமுது செய்ய காசு கொடை அளித்த செய்தி - குறிக்கப் பெறுகின்றது.
கோயம்புத்தூர்>உடுமலைப்பேட்டை>கடத்தூர்
Records a gift of gold (two kalanju) for making aram (chain) by Kumaran cattan alias Vicayatananceya Pallavaraiyan. The gold is said to have been to standard gold of kadarrur. இறைவனுக்கு ஆரம் கொடையாக அளிக்கப் பெற்ற செய்தி கூறப்பெறுகின்றது. அளிக்கப் பெற்ற இருகழஞ்சுப் பொன் இவ்வூராணியோ டொக்கும் என்று கூறுவது எடுத்துக்காட்டத் தக்கது கோயில் நாயகர் மருதவனப் பெருமாள் என்று குறிக்கப் பெறுகின்றார்.
கோயம்புத்தூர்>உடுமலைப்பேட்டை>கடத்தூர்
Records a gift of land by Vikkirama Cola. Tiripurana lingatevan. The signituries are Thiribuvana lingadevan andKottappicolan. மருதுடையார் கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடை. தொடக்கம் இல்லை. கொத்தப்பிச் சோழன் என்பான் ஓப்பமிட்டவர்களுள் ஒருவன். மடம் குறிக்கப் பெறுகின்றது.
கோயம்புத்தூர்>அவிநாசி>நடுவச்சேரி
Records a gift of tank and field to the temple of Kotaipirattiswara mudaiyar and goddess. இக்கோயில் இறைவனுக்கும் அம்மன் கோமளவல்லியார்க்கும் குளம் மற்றும் வயல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர்>அவிநாசி>சேவூர்
Records a gift of the village Karaypadi by assembly of Vellanadu and Pulvanadu, to the Alagapperumal temple for daily offerings. சேவூர் சுந்தரபாண்டிய விண்ணகரப் பெருமாள் கோயிலுக்கு அமுது படிக்காக திருவிடையாட்ட இறையிலியாக காரைய்பாடி தேவதானக் கொடையாகத் தரப்பட்டது. வடபரிசாரநாட்டு வெள்ளாநாடு மற்றும் பூலுவ நாட்டார் இந்நிலக் கொடையை அளித்தனர்.
கோயம்புத்தூர்>அவிநாசி>சேவூர்
Records a gift of land by the assemblies of Vallanadu and Puluvanadu of Vadaparicaranadu from Marudur for the festival during ther month of cittirai. சேவூர் சுந்தரபாண்டிய விண்ணகரக் கோயிலுக்கு வடபரிசாரநாட்டு வெள்ளா நாட்டார், பூலுவநாட்டார் மருதூர் நிலத்தை இறையிலியாக்கிக் கொடையளலித்தனர் கோயில் நம்பிமாரும் ஸ்ரீவைஷ்ணவரும் இந்நிலக்கொடையைப் பெற்று பெருமாள் சித்திரைத் திருநாளில் எழுந்தருளும் திருவிழாவைச் சிறப்பாக நடத்தினர்.
கோயம்புத்தூர்>அவிநாசி>அன்னூர்
Records a gift of Naraikka(lam) (bugle ?) by a certain Avaniyarayan, a kaikkola residing in Vellalur. முதல் இராஜேந்திர சோமனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இசைக்கருவிகளான Cara, அறிஞ்சு, காளம் முதலியவை கொட்டுபவர்களுக்கும் பள்ளியெழுச்சி ஆட்டத்துக்கு வாசிக்கும் உவச்சர்களுக்கும் சாக்கைக் கூத்து ஆடுபவனுக்கும் குறிப்பிட்ட அளவில் நெல் கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. இவ்வாறு கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெல்லின் அளவுகளும், அந் நெல் எந்த நிலத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. மேலும் திருவிழாவின் போது ஓவ்வொரு நாளும் கலம் இடுபவர் எழுபதின் மார்க்கும் ஸ்ரீகாரியம் செய்யும் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிர படாரர்க்கும் எவ்வளவு நெல் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு கோயில் பணியாளர்களுக்குப் பல்வேறு பெயருடன் கூடிய நிலங்களிலிருந்து நெல் தரப்பட்டது. ஸ்ரீகரணமயக்கல், சண்டேஸ்வர விளாகம், போன்ற நிலங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. பரமேஸ்வரன் ஸ்ரீகண்டனான மருதூர் சாக்கை என்பது மேற்கூறிய சாக்கை கூத்து ஆடு பவனின் பெயராகும். இவ்வூரில் ஞானசம்பந்தசேரி என்ற ஓரு பகுதி இருந்ததென்றும், அங்கு இக்கோயில் இறைவனுக்கு வேண்டிய எண்ணெய் ஆட்டப் பட்டது என்ற செய்தியும் தெரியவருகிறது.
கோயம்புத்தூர்>அவிநாசி>அன்னூர்
Records a privilage of the villages of Manniyur, Gangaippalli and Karuvalur and their hamlets to provide men for holding lamps during the various services in the Manniur Andar temple. Tax collection was also entrusted with ur assembly. கல்வெட்டு சில இடங்களில் சிதைந்துள்ளது. இறைவன் எழுந்தருளும் போது திருப்பலிக்கும் விளக்கு பிடிக்கவும் திருவாலத்தி காட்டவும் தீபம் கொளுத்தவும் மன்னியூர், கங்கைப்பள்ளி, கருவலூர், இவற்றின் பிடாகைகள் ஆகியவற்றின் வரிகளை கோயில் கருவூலத்தில் செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது. ஊர்ச்சபை செயல்பட்டுள்ளமை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.
கோயம்புத்தூர்>அவிநாசி>அன்னூர்
Records a gift of money for providing offerings on New Moon days to the God Manniyur - Udaiyar by Munaiyadaraiyan a native of Vallam who is mentioned as one of the mudalis of the king (perumal). அரசன் அதிகாரிகளில் வலலங்கிழான் மல்லன் அழகியதிருச் சுற்றம்பலமுடையான் ஆனமுனைய. தரையன் அமாவசை நாளில இறைவன் எழுந்தருளும் போது அழுது படி செய்ய ஆறுபழஞ்சலாகை அச்சுகளைக் கொடையாக அளித்துள்ளான். இவன் முனையதரைய மரபினைச் சேர்ந்தவன்.
கோயம்புத்தூர்>அவிநாசி>அவிநாசி
Records the conferment of kani nights of accountantship of the village and temple upon Elumpotalakiyan from Perupuliyurin Rajaraja valanadu, a sub division of Colamandalam by the king. King also given the tax - free land to this person. சோழ மண்டலத்து இராசராச வ்ளநாட்டுப் பெரும்புலியூரைச் சேர்ந்த எழும்போதழகியான் என்பவனுக்கு ஊர்கணக்கு, கோயில் கணக்கு, வீட்டு மனை, இறையிலி நிலம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகின்றது.