கோயம்புத்தூர்வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளன் ஆன திருஞானசம்பந்தன் என்பான் சங்€சுவரரர் கோயிலில் திருக்கார்த்திகை நாளில் இறைவன் எழுந்தருளவும், திருஅமுதுக்கும் அச்சுக்காசுகள் கொடையளித்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது.
திருப்பூர்விக்கிரமசோழன் ஆட்சியின் போது, திரிபுவன சிங்கன் என்பவனுக்குப் பிரமேகம் என்ற சர்க்கரை நோய் வந்து கடத்தூர் இறைவன் அருளால் நீங்கினமையும், உதயாதிச்சதேவந் துரோகியாய் ஓடிய செய்துயும், சீதனமாக நிலம் வழங்கிய செய்தியும் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. இரு அதிகாரிகள் ஒப்பமிட்டுள்ளனர்.
திருப்பூர்இறைவனுக்கு ஆரம் கொடையாக அளிக்கப் பெற்ற செய்தி கூறப்பெறுகின்றது. அளிக்கப் பெற்ற இருகழஞ்சுப் பொன் இவ்வூராணியோ டொக்கும் என்று கூறுவது எடுத்துக்காட்டத் தக்கது கோயில் நாயகர் மருதவனப் பெருமாள் என்று குறிக்கப் பெறுகின்றார்.
திருப்பூர்மருதுடையார் கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடை. தொடக்கம் இல்லை. கொத்தப்பிச் சோழன் என்பான் ஓப்பமிட்டவர்களுள் ஒருவன். மடம் குறிக்கப் பெறுகின்றது.
திருப்பூர்சேவூர் சுந்தரபாண்டிய விண்ணகரக் கோயிலுக்கு வடபரிசாரநாட்டு வெள்ளா நாட்டார், பூலுவநாட்டார் மருதூர் நிலத்தை இறையிலியாக்கிக் கொடையளலித்தனர் கோயில் நம்பிமாரும் ஸ்ரீவைஷ்ணவரும் இந்நிலக்கொடையைப் பெற்று பெருமாள் சித்திரைத் திருநாளில் எழுந்தருளும் திருவிழாவைச் சிறப்பாக நடத்தினர்.
கோயம்புத்தூர்முதல் இராஜேந்திர சோமனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் இக்கல்வெட்டு, இசைக்கருவிகளான Cara, அறிஞ்சு, காளம் முதலியவை கொட்டுபவர்களுக்கும் பள்ளியெழுச்சி ஆட்டத்துக்கு வாசிக்கும் உவச்சர்களுக்கும் சாக்கைக் கூத்து ஆடுபவனுக்கும் குறிப்பிட்ட அளவில் நெல் கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. இவ்வாறு கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெல்லின் அளவுகளும், அந் நெல் எந்த நிலத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. மேலும் திருவிழாவின் போது ஓவ்வொரு நாளும் கலம் இடுபவர் எழுபதின் மார்க்கும் ஸ்ரீகாரியம் செய்யும் சிவபிராமணர் நாற்பத்தெண்ணாயிர படாரர்க்கும் எவ்வளவு நெல் கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு கோயில் பணியாளர்களுக்குப் பல்வேறு பெயருடன் கூடிய நிலங்களிலிருந்து நெல் தரப்பட்டது. ஸ்ரீகரணமயக்கல், சண்டேஸ்வர விளாகம், போன்ற நிலங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. பரமேஸ்வரன் ஸ்ரீகண்டனான மருதூர் சாக்கை என்பது மேற்கூறிய சாக்கை கூத்து ஆடு பவனின் பெயராகும். இவ்வூரில் ஞானசம்பந்தசேரி என்ற ஓரு பகுதி இருந்ததென்றும், அங்கு இக்கோயில் இறைவனுக்கு வேண்டிய எண்ணெய் ஆட்டப் பட்டது என்ற செய்தியும் தெரியவருகிறது.
கோயம்புத்தூர்கல்வெட்டு சில இடங்களில் சிதைந்துள்ளது. இறைவன் எழுந்தருளும் போது திருப்பலிக்கும் விளக்கு பிடிக்கவும் திருவாலத்தி காட்டவும் தீபம் கொளுத்தவும் மன்னியூர், கங்கைப்பள்ளி, கருவலூர், இவற்றின் பிடாகைகள் ஆகியவற்றின் வரிகளை கோயில் கருவூலத்தில் செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது. ஊர்ச்சபை செயல்பட்டுள்ளமை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.
கோயம்புத்தூர்அரசன் அதிகாரிகளில் வலலங்கிழான் மல்லன் அழகியதிருச் சுற்றம்பலமுடையான் ஆனமுனைய. தரையன் அமாவசை நாளில இறைவன் எழுந்தருளும் போது அழுது படி செய்ய ஆறுபழஞ்சலாகை அச்சுகளைக் கொடையாக அளித்துள்ளான். இவன் முனையதரைய மரபினைச் சேர்ந்தவன்.
திருப்பூர்சோழ மண்டலத்து இராசராச வ்ளநாட்டுப் பெரும்புலியூரைச் சேர்ந்த எழும்போதழகியான் என்பவனுக்கு ஊர்கணக்கு, கோயில் கணக்கு, வீட்டு மனை, இறையிலி நிலம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகின்றது.
சென்னைகோட்டூர் நாட்டைச் சேர்ந்த திருவான்மியூர் இறைவர்க்கு நந்தா விளக்கு ஒன்று எரிய வைப்பதற்காக [முப்]ப. த்திரண்டு பசு ஒரு காளை ஆகியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கிறது.
சென்னைஇக்கல்வெட்டு திரிசூலம் கோயிலைச் சேர்ந்ததாக இருக்கலாம். சில கோயில்களைச் சேர்ந்த தேவதான திருவிடையாட்ட நிலங்களை திரிசூல இறைவர்க்கு திருநாமத்துக்காணியாக விற்று தத்ததைக் குறிக்கிறது.
மதுரைமதுரை நகர் இராயப்பன் சாவடி என்ற இடத்திலுள்ள கோபால கொத்தனார் செய்த வட்டு ஒன்றைப் பற்றித் தெரிவிக்கின்றது. வட்டு என்பது கிணற்றில் நர் இறைக்கப் பயன்படும் உருளையாகும். (சக்கரம்)
மதுரைகள்ளழகர் கோயில் இறைவர்க்கு புழுகு சாத்துவதற்கு ஆகும் செலவுகளுக்காக குண்றத்தூர்க் குளக்கீழ் காரிசேரி ஊரார் பக்கல் விலை கொண்ட நிலக்கொடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.