Skip to main content

1128 results found

சென்னை>தென்சென்னை>சாந்தோம்
- மயிலாப்பூர் ஈச்சரமுடையார் கோயிலில் கூத்தாடுந்தேவர்க்கு ஒரு சந்தி விளக்கு எரிய வைப்பதற்காக இறையிலி நிலம் அளித்ததைக் குறிக்கிறது.
சென்னை>தென்சென்னை>மயிலாப்பூர்
- கோட்டூர் நாட்டைச் சேர்ந்த திருவான்மியூர் இறைவர்க்கு நந்தா விளக்கு ஒன்று எரிய வைப்பதற்காக [முப்]ப. த்திரண்டு பசு ஒரு காளை ஆகியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கிறது.
சென்னை>தென்சென்னை>மயிலாப்பூர்
- இக்கல்வெட்டு திரிசூலம் கோயிலைச் சேர்ந்ததாக இருக்கலாம். சில கோயில்களைச் சேர்ந்த தேவதான திருவிடையாட்ட நிலங்களை திரிசூல இறைவர்க்கு திருநாமத்துக்காணியாக விற்று தத்ததைக் குறிக்கிறது.
சென்னை>தென்சென்னை>திருவல்லிக்கேணி
- இறைவனை ஒரு குறிப்பிட்ட நாளில் ஊர்வலம் எடுக்க வேண்டி நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the lampstone near the Padhinettampadi - British period - 1843 கற் . - Records the gift a roller which was used for fetching water, by a certain Gopala Kotthanar, a resident of Royappan Savadi located in Madurai. மதுரை நகர் இராயப்பன் சாவடி என்ற இடத்திலுள்ள கோபால கொத்தனார் செய்த வட்டு ஒன்றைப் பற்றித் தெரிவிக்கின்றது. வட்டு என்பது கிணற்றில் நர் இறைக்கப் பயன்படும் உருளையாகும். (சக்கரம்)
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the north wall of Thayar Shrine - Fragments- Seems to be portions of certain land endowment documents. துண்டுக் கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றன. நிலக்கொடை, இறையிலி செய்யப்பட்ட விபரங்கள் அறியப்படுகின்றன.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
- கள்ளழகர் கோயில் இறைவர்க்கு புழுகு சாத்துவதற்கு ஆகும் செலவுகளுக்காக குண்றத்தூர்க் குளக்கீழ் காரிசேரி ஊரார் பக்கல் விலை கொண்ட நிலக்கொடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the south wall of Thondaiman Gopuram - 13th Century A. D., - Records an endowment of land to this temple after purchasing it from the villagers of Kariseri village. இக்கல்வெட்டு திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிக்குத் திருவிளக்குப்புறமாகக் களவழிநாட்டுச் செங்களம் என்ற ஊரில் இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. செங்களம் மனைபுலிவாணராயர் காணியாக விளங்கியது. இந்நிலத்தின் எல்லைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் வரிகள் வரியிலார், (புரவு வரித் திணைக்களம்) நாட்டார், ஊரார் ஆகியோர் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
Inscription noticed in the Thondaiman Gopuram - 17° Century A. D. - Records the name of the devotee of this temple as Arasar who is recorded to be the son of a certain Muthaliyar who is said to be the brother of a certain Mathalam Pakkilar. இவ்வூர் இறைவன் மீது மிகுந்த பற்றுடைய நபர்களின் செயல் காட்டப்பட்டுள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the north base of Mettukrishna Mandapa of Kallalagar temple - Later Pandya - Jadavarman Sundarapandya - 13 Century A. D., - Fragment Seems to record. most probably remission of certain taxes for the worship of the image of Atkonda Vinnagar Emperuman set up by a certain Vemburudaiyan Nambiyan. வெம்பூரூடையான் நம்பிபாலன் என்பவன் கட்டுவித்த ஆட்கொண்ட விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலுக்குத் (தேவி மங்கலத்தில்) இறையிலியாக நிலமளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலத்திற்கு அழகர். திருமுகப்படி கடமை இறுக்கும் கோலால் நிலமளந்து ஒரு பொன் வாங்கப்பட்டது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the south base of Sundarapandiyan Kuradu Mandapa - Later Pandya -Konerinmaikondan - 13 Century A. D., - Records that the village Vilattur located in Chola Pandya valanadu was endowed to this temple to meet out the expenses of the monthly special pujas for the God and Goddess at Sundarapandiyan Thirumandapa of this temple. அழகர் கோயிலில் மாதந்தோறும் கொண்டாடப்படும் விழா ஒன்றுக்காகவும், திருமஞ்சனத்துக்காகவும், அழமுதுபடி, சாத்துபடி, செலவுகளுக்காகவும் சோழ பாண்டிய வளநாட்டு விளத்தூர் கிராமம் பலவித இறைகளும் தவிர்த்துத் திருவிடையாட்டமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the northern base of Garuda Mandapa - Later Pandya Srivallaba Deva - 13 Century A. D., - Records certain arrangements made for the special worship of the deities during the day of Visakamasterism in the months of Ani, Adi and Thai. During the above entioned festival days the images of Alagar and Nacchiyar were kept in the Sundarapandiyan Thirumandapam, for conducting special worships. இவ்விறைவனும் இறைவியும், ஆடி, தை, ஆனி மாதங்களில் விசாக நட்சத்திரத்தில் சுந்தரபாண்டியன் திரு மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்வு பற்றியும், அப்போது நடைபெறும் திருமஞ்சனம், அமுதுபடி சாத்துபடி பூசைக்குமாக விடப்பட்ட நிலதானம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the southern side of the Sundarapandiyan Kuradu - Later Pandya - 13 Century A. D., - Fragment - Seems to record an endowment of land as Thirumalaippuram to this temple. தொடக்கமும் முடிவுமில்லாது இருக்கின்றது. இவ்வூர் இறைவர்க்குத் திருமாலைப்புறமாக இடப்பட்ட நிலதானம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. மேலும் சிறப்பு பூசைகளுக்குத் தேவையான பொருட்களும் வழங்க ஆணையிடப்பட்டதும் தெரிகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the east wall of the Sundarapandiyan Kuradu at Kallalagar temple - Later Pandya - 13 Century A. D., - Records the endowment of land as Thrippuram to meet out the expenses of the garlands to the deity Thirumalirun cholai nindraruliya paramaswamikal. திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளுக்குத் திருமாலைகள் அளிப்பதற்காகத் திருமாலைப்புறம் என்ற பெயரில் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்நிலத்தைப் பெற்றுக்கொண்ட காணியாளர்களாக சோலைமலைப் பெருமாள், திருமாலை சாத்தினார், திருவாய்மொழிதாசன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இந்நிலத்தில் பயிரிடும் பயிர்களும் அதற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the southen portion of the eastern wall of the Garuda Mandapam (Sundarapandiyan Kuradu) - 1605 A. D. - Records that the deity Alagar was taken to Thiruvengadamudaiyan temple at Appan Thiruppathi by Rangayyankar son of Appayyankar - One Mandapam where this deity Alagar was installed seems to have seen named after the above said Thiruvengadamudaiyan as Thiruvengadamudaiyar thiruvaradhanai mandapam. இவ்விறைவர்க்கு அமுதுபடிக்குக் கொடுக்கப்பட்ட மளிகைப் பொருட்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. மேலும் அப்பய்யங்கார் குமாரன் இரங்கய்யங்கார் செய்த பணிகளும், இறைவன் திருவேங்கடமுடையான் திருவாராதனை மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வுகளுக்கு இராக்கவுண்டர், அச்சிராமக் கவுண்டர் கொடுத்த தானங்கள் பற்றியும் கூறப்படுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the eastern wall of the Garuda Mandapam of Kallalagar temple - 1608 A. D., - Damaged - Records certain gifts made by certain chettiyars for provision of food offerings and perpetual lamp. இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு செட்டியார்கள் கொடுத்த தானம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இறைவனுக்குத் திருவிளக்குக்காகவும், அமுதுபடிக்கும் கொடுக்கப்பட்ட பொருள்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இத்தானத்திற்குத் தீங்கு செய்பவர் பெறும் பயன் பற்றிய ஓம்படைக் கிளவி பற்றிக் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the western outer wall of the First Prakara - Later Pandya - 13 Century A. D., - Fragments - Seems to record certain gift of lands as Madappurairaiyili for the upkeeping of the Vanadhirayan mutt . தொடக்கமில்லாத துண்டுக் கல்வெட்டு. வாணாதராயர் மடத்திற்கு மடப்புற இறையிலியாக விடப்பட்ட நிலம் பற்றியும் அதில் விளையும் பயிர் முதலானவை குறுவையில் விளைந்தவை பற்றியும் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the western wall of the First Prakara of this temple - Later Pandya - 13 Century A. D., - Fragment - seems to record a land gift as Devadhana iraiyili and gift of 30 kasus. தொடக்கமும் முடிவும் இல்லா துண்டுக் கல்வெட்டு, தேவதான இறையிலியாக இடப்பட்ட நிலம் மற்றும் அச்சு(காசு) முப்பதும் தானமாகக் கொடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the western outer wall of the First Prakara, Later Pandya - Records the gift of lands as Madappura iraiyili, for the celebrations in the months of Adi, Aippasi, and Chitthirai - the place where these donated lands located was named as Sundharttholudatyan Vilakam . கல்வெட்டின் நடுப்பகுதி தூணுக்குள் மறைந்துள்ளது. இவ்விறைவர்க்கு நடைபெறும் திருவாடித் திருநாள், ஐப்பசித் திருநள், சித்திரைத் திருநாள் முதலானவற்றிற்கு மடப்புற இறையிலியாக இடப்பட்ட 214 வேலி நிலம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. இந்நிலம் உள்ள பகுதியினை பழைய ஊரிலிருந்து பிரித்து புதிய பெயரான சுந்தரத் தொளுடையான் விளாகம் எனப் பெயரிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the northern outer wall of the First Prakara - Later Pandya - Kulasekara Deva - 1203 A. D., - Records the gift of land for the festivals celebrated in the months of Adi, Aippasi and Markali - Among these Markali festival seems to have been celebrated in a grand manner. பூவின் கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திக்கு உரியவனான குலசேகரனின் கல்வெட்டாகும். இவ்விறைவர்க்கும், இக்கோயில் ஸ்ரீவைஷணவர்களுக்கும், நம்பு செய்வானுக்கும் நிலத்தானம் கொடுக்கப்பட்டது. இவ்விறைவர்க்கு ஆடித்திருநாள், ஐப்பசித் திருநாள், மார்கழித் திருநாள் சிறப்புற நடத்துவதற்கு மடப்புற இறையிலியாக நிலம் தானமாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விறைவனுக்கு திருப்பள்ளித் தொங்கல்புறமாக இரண்டு வேலி நிலம் தானமாக வழங்கப்ட்டதையும் தெரிவிக்கின்றது.