Skip to main content

1146 results found

மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இக்கல்வெட்டு திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிக்குத் திருவிளக்குப்புறமாகக் களவழிநாட்டுச் செங்களம் என்ற ஊரில் இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. செங்களம் மனைபுலிவாணராயர் காணியாக விளங்கியது. இந்நிலத்தின் எல்லைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் வரிகள் வரியிலார், (புரவு வரித் திணைக்களம்) நாட்டார், ஊரார் ஆகியோர் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுள்ளன.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இவ்வூர் இறைவன் மீது மிகுந்த பற்றுடைய நபர்களின் செயல் காட்டப்பட்டுள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை வெம்பூரூடையான் நம்பிபாலன் என்பவன் கட்டுவித்த ஆட்கொண்ட விண்ணகரம் என்ற பெருமாள் கோயிலுக்குத் (தேவி மங்கலத்தில்) இறையிலியாக நிலமளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலத்திற்கு அழகர். திருமுகப்படி கடமை இறுக்கும் கோலால் நிலமளந்து ஒரு பொன் வாங்கப்பட்டது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை அழகர் கோயிலில் மாதந்தோறும் கொண்டாடப்படும் விழா ஒன்றுக்காகவும், திருமஞ்சனத்துக்காகவும், அழமுதுபடி, சாத்துபடி, செலவுகளுக்காகவும் சோழ பாண்டிய வளநாட்டு விளத்தூர் கிராமம் பலவித இறைகளும் தவிர்த்துத் திருவிடையாட்டமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இவ்விறைவனும் இறைவியும், ஆடி, தை, ஆனி மாதங்களில் விசாக நட்சத்திரத்தில் சுந்தரபாண்டியன் திரு மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்வு பற்றியும், அப்போது நடைபெறும் திருமஞ்சனம், அமுதுபடி சாத்துபடி பூசைக்குமாக விடப்பட்ட நிலதானம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை தொடக்கமும் முடிவுமில்லாது இருக்கின்றது. இவ்வூர் இறைவர்க்குத் திருமாலைப்புறமாக இடப்பட்ட நிலதானம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. மேலும் சிறப்பு பூசைகளுக்குத் தேவையான பொருட்களும் வழங்க ஆணையிடப்பட்டதும் தெரிகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளுக்குத் திருமாலைகள் அளிப்பதற்காகத் திருமாலைப்புறம் என்ற பெயரில் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்நிலத்தைப் பெற்றுக்கொண்ட காணியாளர்களாக சோலைமலைப் பெருமாள், திருமாலை சாத்தினார், திருவாய்மொழிதாசன் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இந்நிலத்தில் பயிரிடும் பயிர்களும் அதற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இவ்விறைவர்க்கு அமுதுபடிக்குக் கொடுக்கப்பட்ட மளிகைப் பொருட்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. மேலும் அப்பய்யங்கார் குமாரன் இரங்கய்யங்கார் செய்த பணிகளும், இறைவன் திருவேங்கடமுடையான் திருவாராதனை மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வுகளுக்கு இராக்கவுண்டர், அச்சிராமக் கவுண்டர் கொடுத்த தானங்கள் பற்றியும் கூறப்படுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு செட்டியார்கள் கொடுத்த தானம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இறைவனுக்குத் திருவிளக்குக்காகவும், அமுதுபடிக்கும் கொடுக்கப்பட்ட பொருள்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இத்தானத்திற்குத் தீங்கு செய்பவர் பெறும் பயன் பற்றிய ஓம்படைக் கிளவி பற்றிக் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை தொடக்கமில்லாத துண்டுக் கல்வெட்டு. வாணாதராயர் மடத்திற்கு மடப்புற இறையிலியாக விடப்பட்ட நிலம் பற்றியும் அதில் விளையும் பயிர் முதலானவை குறுவையில் விளைந்தவை பற்றியும் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை தொடக்கமும் முடிவும் இல்லா துண்டுக் கல்வெட்டு, தேவதான இறையிலியாக இடப்பட்ட நிலம் மற்றும் அச்சு(காசு) முப்பதும் தானமாகக் கொடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை கல்வெட்டின் நடுப்பகுதி தூணுக்குள் மறைந்துள்ளது. இவ்விறைவர்க்கு நடைபெறும் திருவாடித் திருநாள், ஐப்பசித் திருநள், சித்திரைத் திருநாள் முதலானவற்றிற்கு மடப்புற இறையிலியாக இடப்பட்ட 214 வேலி நிலம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. இந்நிலம் உள்ள பகுதியினை பழைய ஊரிலிருந்து பிரித்து புதிய பெயரான சுந்தரத் தொளுடையான் விளாகம் எனப் பெயரிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை பூவின் கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திக்கு உரியவனான குலசேகரனின் கல்வெட்டாகும். இவ்விறைவர்க்கும், இக்கோயில் ஸ்ரீவைஷணவர்களுக்கும், நம்பு செய்வானுக்கும் நிலத்தானம் கொடுக்கப்பட்டது. இவ்விறைவர்க்கு ஆடித்திருநாள், ஐப்பசித் திருநாள், மார்கழித் திருநாள் சிறப்புற நடத்துவதற்கு மடப்புற இறையிலியாக நிலம் தானமாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விறைவனுக்கு திருப்பள்ளித் தொங்கல்புறமாக இரண்டு வேலி நிலம் தானமாக வழங்கப்ட்டதையும் தெரிவிக்கின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை தொடக்கமும் முடிவுமில்லாத துண்டுக் கல்வெட்டு ஒன்றும், தொடக்கமில்லாத பாண்டியன் குலசேகரனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள் இடம் பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர் இறைவர்க்குத் தானமாய்க் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. முன் சொன்ன கல்வெட்டினைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை பூவின் கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியினனான சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டாகும். இவ்வூர் இறைவர்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்கு விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தருகின்றது. இத்தானம் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்தது என்பதை எதிராமாண்டு, எதிராமாண்டின் எதிராமாண்டு எனக் குறித்து கல்வெட்டப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர்க்கு திருமலையுடையான் விளாகம் என்று பெயரிடப்பட்டதையும் அறியமுடிகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இக்கோயில் இறைவர்க்கு இராமன் கண்ணபிரானான கலிகடிந்த பாண்டிய தேவர் கொடுத்த தானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. இவர் திருநந்தவனம் ஒன்று நிறுவி அதிலிருந்து கிடைக்கும் மலர்களைக் கொண்டு தினம் நூறு மாலைகளும், ஒரு தோள் மாலையும் தயார் செய்து இறைவனுக்குச் சாத்தவேண்டும் என வென்று கிழி கொண்டதாதர் என்பவரிடம் ஒப்படைத்தார். இச்செயல்பாடு தவறாது நடந்துவரும் பொருட்டு நூறு காசுகளையும் வைப்புத் தொகையாக வைத்துள்ளார். தாதரும் அவரின் வர்க்கத்தாரும் இச்செயல் செய்யப் பணித்துள்ளார்.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை மேலும் கீழுமாக இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வூர் இறைவர்க்கும், இவ்விறைவனை வழிபடுவோர்க்கும் ஆக விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. திருநாடுடையார் மடத்தில் ஸ்ரீதண்டி சன்யாசிகளுக்கும், ஏகாந்திகளுக்கும் உணவு மற்றும் சித்தாகாரம் இடவிடப்பட்ட நிலம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இதே செய்தியினை மற்றொரு கல்வெட்டு (சுந்தரபாண்டியனின். கல்வெட்டு) குறிப்பிடுகின்றது. மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் அக்கல்வெட்டு முற்றுப்பெறாமல் நிற்கிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை தொடக்கம் இல்லாத இக்கல்வெட்டு இக்கோயில் இறைவர்க்கு நடைபெற்ற அமாவாசைத் திருநாளுக்கு வழங்கப்பட்ட பூசைப் பொருட்கள், தளிகைப் (உணவுப்)பொருட்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இவ்வமாவாசைத் திருநாள் மாதந்தோறும் நடைபெற்றது என்பதும், அதற்கான தேவைப் பொருட்கள் முட்டாமல் நிகழவேண்டும் என ஓம்படைக்கிளவி அமைத்துக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின் முடிவில் வடமொழிச் சுலோகமும் தரப்பட்டுள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை இக்கோயில் இறைவன் பேரில் பற்று கொண்ட தடங்கணணிச் சிற்றூருடையானான சோரன் உய்ய நின்றாடுவானானான குருகுலத்தரையன் என்பான் செய்த நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது இவன் தன்பேரால் வைத்த சந்திக்கு வேண்டிய திருப்படி மாற்றுள்ளிட்டனவுக்கும் இக்கோயில் வைஷ்ணவர்கள் தேவைக்குமாக இத்தானம் வழங்கப்பட்டது. மேலும் இக்கல்வெட்டை வெட்டிய சிற்பாசாரியன் பெயரும் கல்வெட்டின் முடிவில் காணப்படுவது சிறப்புடைய ஒன்று.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
மதுரை பவித்திர மாணிக்கபுரத்து நிலங்கள் பயிரேற்றி அவற்றின் வரிகள் இறையிலியாக அளிக்கப்பட்டதைக் கூறுகிறது.