Skip to main content

1128 results found

மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the northern outer wall of First Prakara - Later Pandya - Fragments Seems to record a certain land gift. தொடக்கமும் முடிவுமில்லாத துண்டுக் கல்வெட்டு ஒன்றும், தொடக்கமில்லாத பாண்டியன் குலசேகரனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள் இடம் பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர் இறைவர்க்குத் தானமாய்க் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. முன் சொன்ன கல்வெட்டினைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the northern outer wall of the First Prakara wall - Later Pandya -Kulasekara Pandya - 1203 A. D., - Records the gift of land - The area within which these lands were located was named as Thirumalaiyudaiyan vilakam . பூவின் கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியினனான சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டாகும். இவ்வூர் இறைவர்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்கு விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தருகின்றது. இத்தானம் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்தது என்பதை எதிராமாண்டு, எதிராமாண்டின் எதிராமாண்டு எனக் குறித்து கல்வெட்டப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர்க்கு திருமலையுடையான் விளாகம் என்று பெயரிடப்பட்டதையும் அறியமுடிகின்றது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the northern outer wall of the First Prakara - Pandya - Kulasekara - 13 Century A. D., - Records the gift of a temple garden by a certain Raman Kalikadindha Pandya Devar for providing hundred garlands and a special garland to the temple deity. This work was entrusted with a certain Kilikondanathar. Further, the donor had also deposited 100 kasus for the upkeeping of that work without any break in between. இக்கோயில் இறைவர்க்கு இராமன் கண்ணபிரானான கலிகடிந்த பாண்டிய தேவர் கொடுத்த தானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. இவர் திருநந்தவனம் ஒன்று நிறுவி அதிலிருந்து கிடைக்கும் மலர்களைக் கொண்டு தினம் நூறு மாலைகளும், ஒரு தோள் மாலையும் தயார் செய்து இறைவனுக்குச் சாத்தவேண்டும் என வென்று கிழி கொண்டதாதர் என்பவரிடம் ஒப்படைத்தார். இச்செயல்பாடு தவறாது நடந்துவரும் பொருட்டு நூறு காசுகளையும் வைப்புத் தொகையாக வைத்துள்ளார். தாதரும் அவரின் வர்க்கத்தாரும் இச்செயல் செய்யப் பணித்துள்ளார்.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
On the First Prakara wall of the temple - Later Pandya - 135 Century. A. D. - Two inscriptions are engraved continuously - Records the gift of 214 land by which provisions are made for feeding the sanyasins at Thirunadudaiyar mutt. மேலும் கீழுமாக இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வூர் இறைவர்க்கும், இவ்விறைவனை வழிபடுவோர்க்கும் ஆக விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கிறது. திருநாடுடையார் மடத்தில் ஸ்ரீதண்டி சன்யாசிகளுக்கும், ஏகாந்திகளுக்கும் உணவு மற்றும் சித்தாகாரம் இடவிடப்பட்ட நிலம் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இதே செய்தியினை மற்றொரு கல்வெட்டு (சுந்தரபாண்டியனின். கல்வெட்டு) குறிப்பிடுகின்றது. மெய்க்கீர்த்தியடன் தொடங்கும் அக்கல்வெட்டு முற்றுப்பெறாமல் நிற்கிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
- தொடக்கம் இல்லாத இக்கல்வெட்டு இக்கோயில் இறைவர்க்கு நடைபெற்ற அமாவாசைத் திருநாளுக்கு வழங்கப்பட்ட பூசைப் பொருட்கள், தளிகைப் (உணவுப்)பொருட்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றது. இவ்வமாவாசைத் திருநாள் மாதந்தோறும் நடைபெற்றது என்பதும், அதற்கான தேவைப் பொருட்கள் முட்டாமல் நிகழவேண்டும் என ஓம்படைக்கிளவி அமைத்துக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின் முடிவில் வடமொழிச் சுலோகமும் தரப்பட்டுள்ளது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
- இக்கோயில் இறைவன் பேரில் பற்று கொண்ட தடங்கணணிச் சிற்றூருடையானான சோரன் உய்ய நின்றாடுவானானான குருகுலத்தரையன் என்பான் செய்த நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது இவன் தன்பேரால் வைத்த சந்திக்கு வேண்டிய திருப்படி மாற்றுள்ளிட்டனவுக்கும் இக்கோயில் வைஷ்ணவர்கள் தேவைக்குமாக இத்தானம் வழங்கப்பட்டது. மேலும் இக்கல்வெட்டை வெட்டிய சிற்பாசாரியன் பெயரும் கல்வெட்டின் முடிவில் காணப்படுவது சிறப்புடைய ஒன்று.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
Inscribed on the inner side of the Western Prakara wall of the Kallalagar temple - Later Pandya - 13 Century - Fragment - Seems to record gift of certain taxes from certain lands at Paviththira manikkapuram alias Sripathi. பவித்திர மாணிக்கபுரத்து நிலங்கள் பயிரேற்றி அவற்றின் வரிகள் இறையிலியாக அளிக்கப்பட்டதைக் கூறுகிறது.
மதுரை>மேலூர்>அழகர் கோயில்
Inscription noticed in the south wall of the Munaiyadaraiyan Mandapam - Fragmentary pieces - Seems to record the gift of Samaiyaneri as tax free to the temple. இத்துண்டுக் கல்வெட்டுக்களில் பிற்காலப் பாண்டியரின் மெய்க்கீர்த்தித் தொடர்கள் உள்ளன. சமையனேரி இறையிலியாக விடப்பட்டதும் அதிகாரிகள் சிலரின் பெயரும் காணப்படுகின்றன.