Skip to main content

1146 results found

திருவண்ணாமலை>வந்தவாசி>சாத்தமங்கலம்
திருவண்ணாமலை நந்திதேவரின் மணாக்கரும், பள்ளிஉரிமை உடையவருமான பலதேவப்பிடாரன் என்பவர் சாத்தமங்கலத்திலுள்ள விமலஸ்ரீ என்றழைக்கப்படும் தீர்த்தப்பள்ளி ஆழ்வார் கோயிலுக்கு நந்தா விளக்கெரிப்பதற்காக இறையிலியாக நிலம் ஒன்றினை அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. கொடையாக அளிக்கப்பட்ட இலாடையர் செறு என்னும் இந்நிலம் இரண்டும் பெருந்தூம்பினால் நீர்ப்பாசனம் செய்யப்பெற்றது. வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலத்தில் பயிர் செய்யும் குடிகளிடத்தும், பள்ளியிடத்தும் கோயில் வாயில் வழிப் போந்த குடிமையும், நீர்விலையும் பெறக்கூடாது என விலக்கு அளிக்கப்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>பொன்னூர்
திருவண்ணாமலை செயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பொன்னூர் பற்று பிரிவில் உள்ள பொன்னூர் என்கிற வீரசிங்கராயபுரம் கோயில் இறைவன் தம்பிரனார் திருப்பிராமீசுரமுடையார் கோயிலில் பெறப்படும் வரிகளுக்கு விலக்களிக்கப்பட்டதாக தெரிகிறது.
திருவண்ணாமலை>வந்தவாசி>பொன்னூர்
திருவண்ணாமலை கல்வெட்டு முற்றுபெறாமல் உள்ளது. திருப்பராமீசுவரமுடைய நாயனர் இறைவன் திருவிழா நாட்களில் திருவீதியுலா செல்வதற்குத் தேவவையான வழிபாட்டுச் செலவினங்களுக்காக நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>பொன்னூர்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து பொன்னூர் திருப்பராமீஸ்வரம் உடையார் கோயில் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டி, அம்மதேவி என்பவள் இவ்வூராரிடம் 40 கழஞ்சுப் பொன் அளித்து ஆயிரம் குழி நிலத்தினை விலைக்கு வாங்கி இந்நிலத்தின் மீதான வரிகளை நீக்கி ‘அம்மதேவி பட்டி என்று பெயரிட்டு கொடையாக அளித்துள்ளாள்.
திருவண்ணாமலை>வந்தவாசி>பொன்னூர்
திருவண்ணாமலை பொம்மு நாயக்கர், வாலு நாயக்கர் ஆகியோரின் நலன் வேண்டி திருப்பிராமீசுரமுடைய நாயனார் இறைவனுக்கு பஞ்சகவ்வியம் வழங்கிடுவதற்கு வந்தவாசி இடைத்துறையில் பெறப்படும் வரிகளை வெங்களப்ப நாயக்கர், ஆயம் கோனப்ப நாயக்கர் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை>வந்தவாசி>மேல்கொடுங்காலூர்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டைச் சேர்ந்த மேற்கொடுங்காலூர் என்னும் ஊர் நெடுநாளாக பாழ்பட்டு கிடந்தது. இப்பகுதி சிற்றரசன் கங்கநாராயணன் சக்கரவர்த்தி என்பவன் பெயரால் இவ்வூருக்கு கங்கநாராயண நல்லூர் என்று பெயரிடப்பட்டது. இவ்வூர் கோயில் அரசகோபாலீசுவரமுடைய நாயனார் இறைவன் வழிபாட்டுக்கு இவ்வூரில் வந்து குடியேறுபவர்களிடம் பெறப்படும் வரிகளை நாட்டவர் வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை திருவகத்தீசுரமுடைய நாயனார் கோயில் சித்திரமேழி விடங்கர் இறைவனுக்கு வைகாசி திருநாள் விழாச் செலவினங்களுக்கு, புவனேகவீர வளநாட்டு நாட்டவர் சிலவரிகளை நீக்கி கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூர் திருவகத்தீசுவரமுடைய நாயனார் கோயில் சித்திரமேழி விடங்கர் இறைவன் பூசைக்கும், திருப்பணிக்கும் வேண்டி ஒரு குறிப்பிட்ட நிலம் ஒன்றினை வழங்கி, அந்நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரியினை மேற்படி செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அரசன் ஆணையிட்டுள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை கொடுங்காலூர் கற்றளி உடைய நாயினார் சித்திரமேழி விடங்கர் இறைவனுக்குத் திருவிழா, கோயில் திருப்பணி மற்றும் பூசைக்காக வேண்டி மேல் கொடுங்காலூரில் வசூலிக்கப்பட்ட வரிகளை நீக்கி உரத்திப்பற்று நாட்டவர் வழங்கியுள்ளனர். கோயிலுக்கு இவ்வரிகளை சறுவமானியமாக வழங்கிட அரசன் ஆணையிட்டுள்ளான். இதே போன்று மேல்கொடுங்காலூர் அரச கோபாலீசுரமுடைய நாயனார் கோயிலுக்கு வழங்கி ஆணையிட்டுள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை ஜெயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு, உரத்திப் பற்று குலோத்துங்க சோழ நல்லூர் என்னும் கொடுங்கோலூர் திருவகத்தீசுவரமுடைய நாயனர் இறைவன் பூசைக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக்கோயிலுக்குரிய நிலம் மற்றும் இக்கோயிலுக்கு திருநாமத்துக்காணியான மேலை கொடுங்காலூர் ஊரிலுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஆகியவை சறுவமானியமாக வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டைச் சேர்ந்த கொடுங்காலூர் கோயில் திருவகத்தீசுவரமுடைய நாயனார் இறைவன் வழிபாட்டுக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிப்போரிடம் வசூலிக்கப்படும் சில வரிகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை இரும்பிடைபாக்கம் என்ற ஊரைச் சார்ந்த சோமன் என்பவனின் மனைவி ஆண்டநாச்சி என்பவள் இக்கோயில் தக்ஷிணாமூர்த்தி இறைவன் வழிபாட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் (பரிக்கலம்), வட்டில், வட்டணைக்கால் ஆகியவற்றினை இக்கோயில் சிவப் பிராமணர்களிடம் வழங்கியுள்ளாள்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை தேவந்தை மலையன் சீராம பெருமாள் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டுக் கொடுங்காலூர் கோயில் இறைவனுக்கு சந்திவிளக்கெரிக்க 3 பழங்காசுகளை இக்கோயில் சிவபிராமணர்களிடம் வழங்கி விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை கொடுங்காலூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் இறைவன் அபிஷேகத்திற்காக வேண்டி இவ்வூரைச் சார்ந்த மன்றாடி இனத்தைச் சார்ந்த சீமன் அம்மை என்பவள் இரண்டு பாத்திரங்களைத் தானமாக வழங்கியுள்ளாள்.
திருவண்ணாமலை>வந்தவாசி>கீழ்க்கொடுங்காலூர்
திருவண்ணாமலை இக்கோயிலைச் சார்ந்த நான்கு சிவபிராமணர்கள், தக்ஷிணாமூர்த்தி இறைவன் முன் சந்திவிளக்கு வைக்க சம்மதித்துள்ள செய்தி.
திருவண்ணாமலை>வெம்பாக்கம்>பிரம்மதேசம்
திருவண்ணாமலை விக்கிரமசோழபுரத்து கோயிலின் உள்ளே அபிஷேக மண்டபத்து முத்துபந்தலின் கீழ் பள்ளிபீடத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழன் எழுந்தருளி இருந்தபோது தாமர்நாட்டு கடைக்கோட்டு பிரம்மதேயம் ஆன தினசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீஉருத்திரசோலை உடைய மகாதேவர்க்குத் தேவதானமாக நிலம் இல்லை என்று குலோத்துங்க சோழ ஸ்வர்ணாதிராஜன் என்னும் அதிகாரி முறையிட்டதின் காரணமாக, அவ்வேளூர் ஊரில் 500 கலம் நெல் வரியாக பெறக்கூடிய அளவுக்கு தேவதான இறையிலியாக வழங்கிட அனபாயநல்லூர் என்று பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கித் தேவதானமாக வழங்கி மன்னன் ஆணையிட்டுள்ளான்.
திருவண்ணாமலை>வெம்பாக்கம்>பிரம்மதேசம்
திருவண்ணாமலை ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு தினச்சிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்து சபையார் ஸ்ரீருத்ரசோலை மகாதேவர் கோயிலுக்கு, இம்மன்னனின் 12, 14 மற்றும் 21-ஆவது ஆட்சியாண்டில் பன்னிரண்டு இடங்களில் 12 தனி நபர்கள் வழங்கிய நிலங்கள் மீதான இறை நீக்கி தேவதானமாக வழங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை>வெம்பாக்கம்>பிரம்மதேசம்
திருவண்ணாமலை மணையில் கோட்டத்து படுவூர் நாட்டைச் சேர்ந்த அழியாத்திறன் விடையின்மேல் வருவான் என்பவன் 20 கழஞ்சு ஒரு மஞ்சாடி அளவு கொண்ட பொன்னிலான பட்டம் ஒன்றினை இக்கோயில் இறைவனுக்குத் தானமளித்துள்ளான்.
திருவண்ணாமலை>வெம்பாக்கம்>பிரம்மதேசம்
திருவண்ணாமலை இக்கோயிலின் கோபுரம், இறைவனுக்கு அமுதுபடி, செந்நெல் அமுது, திருநந்தா விளக்கு, அபிடேகத்திற்குத் தேவையான பால் மற்றும் தயிர் ஆகியவற்றிற்காக இருங்கோள விளாகம் என்னும் நிலத்தினை ஆடவல்லான் கங்கைகொண்டான் என்னும் இருங்கோளன் என்பான் தானமாக வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலை>வெம்பாக்கம்>பிரம்மதேசம்
திருவண்ணாமலை ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலுக்குரிய நிலத்திற்கு இக்கோயில் பண்டாரத்திலிருந்து பொன் பெற்றுக்கொண்டு பராக்கிரம சோழ சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி சபையார் வரிவிலக்கு அளித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு வேதம் வல்ல பிராமணருக்கு உணவளிக்கவும், இறைவனுக்கு சந்தனம், சிகாரி ஆகியவை வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.