திருவண்ணாமலைதாமர் நாட்டுப் பராக்கிரம சோழச் சருப்பேதி மங்கலத்து மகாசபை பெருங்குறி மக்கள் ஸ்ரீபோந்தை உடைய மகாதேவர் மண்டபத்தில் கூடி, இக்கோயில் இறைவனுக்கு திருவாராதனைச் செய்வதற்காக வேண்டி 1126 குழி நிலத்தினை வாங்கி அர்ச்சனை போகமாக வழங்கியுள்ளனர். இந்நிலத்தின் மீதான வரிகளைச் சபையாரே அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
திருவண்ணாமலைஸ்ரீபோந்தையாண்டார் கோயில் வளாகத்தில் இருக்கும் பவித்திர மாணிக்க மடத்தினை நிர்வகிப்பதற்காக மடப்புற இறையிலியாக 3549 குழி நிலத்தின் மீதான அனைத்து வரிகளும் நீக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலங்களின் விளைச்சல்களுக்கும் வரிவிதிப்பதில்லை என்று மகாசபை பெருங்குறி பெருமக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலைபோந்தை ஆழ்வார் கோயிலில் சபையினர் கூடியிருந்தபோது குண்டூர் மாதவ கிரமவித்தன், கோமங்கலத்து ஆதித்த கிரமவித்தன், எயில் திருவேகம்ப கிரமவித்தன் ஆகிய இம்மூவரும் இவ்வூர் சப்தமாதர் (ஏழு கன்னிகையர்) கோயில் இறைவிகளுக்கு திருநந்தா விளக்கு எளிக்க வழிவகைச் செய்துள்ளனர். இக்கல்வெட்டு முழுமைபெறாமல் உள்ளது.
திருவண்ணாமலைஸ்ரீபோந்தையுடைய மகாதேவர் இறைவனுக்கு உச்சியம் பொழுது படைக்கும் அமுதுபடிக்காக இவ்வூர் ஆளுங்கணத்து உறுப்பினர் ஏழரை விசத்து ஆளக்கான கிரமவித்தனிடமிருந்து நிலம் ஒன்றினை இக்கோயில் சிவபிராமணர்கள் பெற்றுக்கொண்டு, இதனின் வரியின் மூலம் வந்த நெல்லினை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைவெற்றியூரைச் சார்ந்த வாட்கை காரிகுடி கரிகுடையான் என்பவன் இவ்வூரின் மேற்கேயுள்ள சுப்பிரமணியதேவர் இறைவனுக்கு திருஅமுது மற்றும் வழிபாட்டிற்காக பராக்கிரம சோழ சதுர்வேதி மங்கலத்து மகாசபையாரிடமிருந்து 1225 குழி நிலம் ஒன்றினை வாங்கி இத்தேவற்குத் தானமளித்துள்ளான். இக்கல்வெட்டின் இறுதியில் மேலும் ஒரு தானம் வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சுப்பிரமண்யதேவர் என்கிற சோழகேரளக் கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க இக்கோயில் சிவபிராமணன் 100 குழி நிலம் பெற்றுக்கொண்டு விளக்கெரிக்கச் சம்மதித்துள்ளான்.
திருவண்ணாமலைஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து காயிரம்பேடு நாட்டு வயலூர் ஆளுங்கணத்து உறுப்பினர் எட்டுக்கூர் தாயபிரான் கிரமவித்தனின் மனைவி மாதேவி சானி என்னும் பிராமணப் பெண் ஒருத்தி திருநந்தா விளக்கு ஒன்று வைக்க துளை நிறைப் பொன் 12/2 கழஞ்சுப் பொன் அளித்துள்ளாள். தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரமதேயமான பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து, பெருங்குறி மகாசபையார் இந்த பொன்னினைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்கத் தேவையான 30 கலம் நெல்லுக்காக 825 குழி நிலத்தினை இறைநீக்கி விற்றுக் கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலைகல்வெட்டு மிகவும் சிதைந்தும், முழுமையடையாமலும் காணப்படுகிறது. சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு, வெண்ணாட்டு பிரமதேயமான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த நாரக்கன் என்பவன் தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரம்மதேயம் எனும் பராக்கிரம சோழச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தையுடையார் கோயிலுக்குத் தானமாக வழங்கிய நெல்லினை மூலதனமாகக் கொண்டு, தினமும் நான்கு வேளையும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு ஸ்ரீவைகுந்தம் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கு வழிவகைச் செய்துள்ளான்.
திருவண்ணாமலைஇராசகேசரிவர்மன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டு சுந்தரசோழனின் கல்வெட்டாக இருக்கலாம். கச்சிபேட்டு திருவேகம்பத்து திருவுண்ணாழிகை சபையைச் சார்ந்த பாரத்வாஜி சதாசிவன் என்பவன் ஒரு குறிப்பிட்ட நிலத்தினை விலைக் கொடுத்து வாங்கியும், மற்றொரு நிலத்தினைப் பரிவர்த்தனையாக மாற்றியும் ஆக இவ்விரு நிலங்களையும் இக்கோயில் இறைவனுக்குத் திருமெய்ப்பூச்சு பூசுவதற்கு வேண்டிய சந்தனம் வழங்கிட வழிவகைச் செய்துள்ளான்.
திருவண்ணாமலைஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயில் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த சாமத்திலும் அபிஷேகம் செய்யும் பிராமணனுக்கு நெல் மற்றும் கூறை (துணி) ஆகியவை வழங்குவதற்குத் தானமாக 30 கழஞ்சுப் பொன் அளிக்கப்பட்டுள்ளது. இப்பொன் தன்மக்கட்டளைக் கல்லால் நிறுத்து தரத்தினை இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து திரைராஜ்ய கடிகாவைச் சார்ந்த மத்தியஸ்தன் பொற்கோயில் மூவாயிரவன் என்னும் சதுரன் என்பவன் சரிபார்த்துள்ளான்.
திருவண்ணாமலைவெளியன் நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த யாமத்திலும் வேதத்தில் வல்லவனாய் உள்ளவன் அபிஷேகம் செய்வதற்காக 525 குழி நிலத்தினை வரிநீக்கிப் பெற்று தானமாக அளித்துள்ளான். கணப்பெருமக்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைகாட்டமய்யன் என்பவன் திருவேங்கடமாதவ சர்வகிருதுயாஜியார் என்பவரிடமிருந்து 10184 குழி நிலம் வாங்கி ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனுக்கு இரவு சந்திக்குத் தேவையான அமுதுபடிக்கும், திருநந்தா விளக்கு வைக்கவும் இந்நிலத்தினை கோயிலுக்குத் தானமளித்துள்ளான். மேலும், இவ்வூர் சபையார் இந்நிலத்தின் மீதான வரியை நீக்கியுள்ளனர்.
திருவண்ணாமலைதாமர் கோட்டத்து இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை மகாதேவ பட்டாரகர் இறைவனுக்கு சூரிய கிரகணத்தின் போது திருநந்தா விளக்கு ஒன்று இரவு பகலும் எளிக்க, சோழநாட்டு கிழார் கூற்றத்து கிளிநல்லூர் ஊர்த் தலைவன் செம்பியன் கிழார் நாட்டுக்கோன் என்பவனிடமிருந்து 15 கழஞ்சுப் பொன்னினை வதியூர் ஊர்ச் சபையர் பெற்றுக்கொண்டு தினம் உழக்கு எண்ணெய் கோயிலுக்கே வந்து அளப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனுடன் பித்தளை (தரா) நிலை விளக்கு ஒன்றும் தானமளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைஇராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து சங்கரப்பாடியில் (எண்ணெய் வணிகர் வசிக்கும் பகுதி)வசிக்கும் பேராய்ய நல்லூழான் ஊரடி என்பானின் மகன் அட்டமூர்த்தி என்பவன் இக்கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி இறைவனுக்கு அமுதுபடி மற்றும் வழிபாட்டுச் செலவுகளுக்காக 325 குழி நிலம் தானமாக வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலைசோழ நாட்டு வடகரை இன்னம்பர் நாட்டைச் சேர்ந்த காரி இலாடஆதித்தன் என்பவன் திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து திருப்போந்தைப் பெருமானடிகள் இறைவனுக்குத் திருநந்தா விளக்கு ஒன்று ளிக்க 121/2 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான். இப்பொன்னின் வட்டியைக் கொண்டு விளக்கெரிக்கக் கணப்பெருமக்கள் சம்மதித்துள்ளனர்.
திருவண்ணாமலைநடுவில் நாட்டு வேசாலி நாட்டு வாகூரில் இருக்கும் மன்றாடி பாதாளி எச்சிநம்பி என்னும் அமுதவல்லக்கோன் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து காழியூர் கோட்டத்து காழியூர் நாட்டு திருவோத்தூருடையார் இறைவனுக்கு திருநந்தா விளக்கு ஒன்று வைப்பதற்கு 90 ஆடுகள் தானமளித்துள்ளான். இக்கோயில் திருநந்தா விளக்குக் குடியைச் சார்ந்த திருவெண்காட்டுக்கோன் என்பவன் இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டுத் தேவையான நெய் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளான்.
திருவண்ணாமலைகாஞ்சிகுறி பாரத்துவாசி சைவாதிராஜன் என்பவருக்கு அத்திபற்று திருவேங்கட நல்லூர் ஊரில் நாட்டு அளவு கோலால் அளக்கப்பட்ட 4 வேலி நிலத்தினை இறைநீக்கி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைநாவனை அக்ரகாரத்தில் வசித்து வரும் பூதிமாஷ கோத்திரத்து ஆசுவலாயன சூத்திரத்து ரிக்வேதம் கற்றறிந்த மாதரசர் வசவணங்கள் என்பவர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்து காழிஊர் நாட்டு திருவோத்தூர் கோயிலுக்குத் திருநந்தவனம், சாத்திரம், மடம் ஆகியவற்றினை நிர்வகிப்பதற்கு கோயில் ஸ்தானிகர் வசம் நிலம் ஒன்றினை அளித்துள்ளார். தினமும் இறைவனுக்குத் திருநந்தவனத்தில் இருந்து பூக்களைக் கொண்டு திருமாலை சாத்திட திருமாலைப்புறமாக நிலம் தானமளிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரத்தினை நிர்வகிப்பதற்கு குடிமனை ஒன்றும் தானமளிக்கப்பட்டுள்ளது.