திருவண்ணாமலைவேலூர் பொம்மு நாயக்கரின் முகவரான திருவேணாதபிள்ளை என்பவர் திருவோத்தூர் கோயில் இறைவனுக்கு பூசை மற்றும் வழிபாட்டிற்காக 22 பொன் தானம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலைவீரகம்ப நாயினார் என்கிற வீரவல்லாள தேவர் திருவோத்தூர் உடைய நாயினார் கோயிலில் அமைந்துள்ள அண்ணாமலை நாயினார் இறைவனின் பூசைக்கும் வழிபாட்டிற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளதால் விவரம் அறியமுடியவில்லை.
திருவண்ணாமலைபல்குன்றக் கோட்டத்து அத்திப்பற்று நாட்டு நாவற்பாக்கம் மற்றும் குதிரைச் சேவகன் தாங்கல் ஆகிய இரண்டு ஊர்களையும் சேர்த்து திருஞானசம்பந்த நல்லூர் என்று பெயரிட்டு இராசநாராயண சம்புவராயன் 4-ஆவது ஆட்சியாண்டில் திருவோத்தூர் கோயிலில் திருப்பாட்டு ஓதும் மாகேசுவரர்க்கு (சிவனடியார்கள்) காணி மடப்புறமாக இறைநீக்கி அத்திப்பற்று நாட்டவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைஅத்திப்பற்று பிரிவில் உள்ள நாவற்பாக்கம் என்னும் திருஞானசம்பந்தர் நல்லூர் மற்றும் இவ்வூரின் பிரிவான குதிரைச்சேவகன் தாங்கல் ஆகிய இரு ஊரவருக்கும் இராசநாராயணன் கொடுத்த ஆணையாகும். இவ்விரு ஊர்களில் வசூலிக்கப்படும் வரிகளில் பாதியை பல கோயில்களுக்கு பூசைக்காக அளித்தது போக மீதியுள்ள அனைத்து வரிகளையும், இக்கோயிலில் திருப்பாட்டு ஓதும் மாகேஸ்வரர்களுக்கு காணி மடப்புற இறையிலியாக அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைதிருவோத்தூருடைய நாயனார் கோயில் இறைவன் முன் தினமும் ஐந்து நபர்கள் ஓதுவதற்கு, திங்கள் அகரம் என்ற ஊரில் உள்ள நஞ்சை புஞ்சை நிலத்தின் மீது பெறப்படும் வரிகளை நீக்கி குலசேகர சம்புவராயன் தானமளித்துள்ளான். செய்யாறு வென்றான் சதுர்வேதி மங்கலத்து வாரியனும் கணக்கனும் பெற்றுக்கொண்டு நடைமுறைபடுத்திட ஆணையிட்டுள்ளான்.
திருவண்ணாமலைதிருவோத்தூருடைய நாயனார் கோயில் இறைவன் முன் 28 திருநந்தா விளக்கு ளிக்க 14 வேலி நிலமும், இக்கோயில் இறைவி இளமுலை நாச்சியார் கோயிலில் 8 திருநந்தா விளக்கு ளிக்க 4 வேலி நிலமும் ஏற்கனவே தானமளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவணிமாதம் முதல் 40 திருநந்தா விளக்கு எளிக்க தச்சன் தாங்கல், சிராயம்பட்டு ஆகிய ஊர்களை திருவிளக்குப்புறமாக வீரசம்புநாயன் என்ற சம்புவராயன் வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலைதனியூர் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) மேலைச்சேரியில் உள்ள ஸ்ரீபதஞ்சலி மகாமுனிதேவன் திருமடம் என்கிற பிக்ஷா மடத்தில் பூசை செய்யப்படுகின்ற விஸ்வேஸ்வர நாயனார் இறைவனின் பூசைக்கும், அமுதுபடிக்கும் மற்றும் மடத்தில் இருக்கும் தபஸ்விகளின் உணவிற்காகவும் வேண்டி ஐயங்கொண்டசோழ மண்டலத்து அத்திப்பற்று அழிபடைத்தாங்கி பற்று நாட்டவர்கள் வெண்குன்றக்கோட்டத்துப் பாரசூர் நாட்டுப் பிரிவில் உள்ள மதுரை எனும் திருவம்பலப் பெருமாநல்லூர் என்னும் ஊரினைக் கொடையளித்துள்ளனர்.
திருவண்ணாமலைகுளமுக்கில் கண்டன் ஏறநம்பி செட்டி என்பவன் திருவோத்தூர் இறைவனுக்கு தப்பாமொழி என்னும் பெயரில் நந்தவனம் ஒன்று அமைக்க 520 குழி நிலம் தானமளித்துள்ளான். இந்நிலத்தின் மீதான இறுக்கப்படும் வரியினைக் கொண்டு இந்நந்தவனத்தில் பூமரங்கள் வைத்து நாளொன்றுக்கு ஒரு குறுணி அளவு பூக்கள் அளக்க அழகியசீயன் சம்மதித்துள்ளான்.
திருவண்ணாமலைதிருவோத்தூருடைய நாயனார் இறைவனுக்கு ஆவணித் திருநாளன்று நடைபெறும் பூசைக்கும், அமுதுக்கும், திருவிளக்கெண்ணைக்கும் மற்றும் இதர தேவைகளுக்காக வெண்குன்றக் கோட்டத்து வாதவூர் நாட்டு மங்கலம் என்னும் ஊரில் உள்ள நன்செய், புன்செய் நிலங்களின் மீதான விதிக்கப்பட்டிருந்த வரிகள் அனைத்தும் இக்கோயிலுக்குத் தேவதானமாகச் செங்கேணி அத்திமல்லவன் சம்புவராயன் எனும் எதிரிலிச் சோழ சம்புவராயன் அளித்துள்ளான்.
திருவண்ணாமலைசெங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிசோழச் சம்புவராயன் என்னும் சிற்றரசன் திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலுக்கு, ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து காசிரம்பேடு நாட்டு மாவண்டூர் ஏரிவாய்ப்பற்று சிற்றியாற்றூர் என்னும் ஊரிலுள்ள நன்செய், புன்செய் நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரிகளைத் தானமாக வழங்கியுள்ளான். இக்கோயிலுக்கு தேவதானங்களான திருவோத்தூர், வயலூர், கன்றியம், சிராயம்பட்டு, அண்டிலி, அனுக்காவூர், தவசிபெரும்பாக்கம் ஆகிய ஊர்களில் வசூலிக்கப்பட்ட வரிகளை மேற்படி சிற்றரசனின் பாட்டன் பாட்டன் தானமாக வழங்கினர் அவற்றினை மீண்டும் உறுதி செய்து திருவோத்தூர் இறைவனின் பூசை மற்றும் இதர வழிபாட்டிற்காகவும் வழங்கியுள்ளான்.
திருவண்ணாமலைபொன்னூர் கண்ணுடையான் காராணை விழுப்பரையன் என்பவன் திருவோத்தூருடையார் இறைவனுக்கு நூற்றுக் கழஞ்சு அளவு பொன்னிலான இரண்டு பட்டங்கள் கொடையளித்துள்ளான்.
திருவண்ணாமலைமதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து நாட்டுப் பிரிவுத் தலைவர்களுக்கு நேரடி ஆணை ஒன்று பிறப்பித்துள்ளான். தேவதானம், திருவிடையாட்டம், அகரப்பற்று, திறப்பு, வன்னியப்பற்று ஆகிய நிலங்களில் இருந்து வேலி ஒன்றுக்கு ஆறு கலம் நெல் வசூல் செய்ய நாட்டவர்களுக்கு ஆணையிட்டுள்ளான். திறப்பு என்பது நேரடியாக அரசுக்கு இறை செலுத்தும் வெள்ளான் வகை நிலம் ஆகும்.
திருவண்ணாமலைசெங்கேணி வீராண்டன் என்பானின் மகன் அத்தியாண்டான் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்துக் காலியூர் நாட்டு திருவோத்தூர் ஊரிலுள்ள ஆளுடையார் திருவோத்தூருடையார் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு எரிக்க 32 பசுக்கள் தானமளித்துள்ளான்.
திருவண்ணாமலைசூற்றி என்பவனின் மகன் கொங்கன் செல்வமுத்தரையன் என்பான் மிருகவேட்டைக்குச் சென்ற போது, மிருகத்தின் மீது எறிந்த அம்பு தவறுதலாக புலியன் என்பவன் மீது பாய்ந்து இறந்துவிட்டான். பன்னாட்டார் என்னும் நிர்வாக அமைப்பினர் கூடி இரு குடும்பத்தாரிடம் பகை ஏற்படவேண்டாம் என்று செல்வமுத்தரையனை இக்குற்றத்திலிருந்து விடுவித்தனர். இக்குற்றத்திற்காகத் திருவோத்தூர் இறைவனுக்கு ஒரு விளக்கு வைக்க பதினாறு பசுக்களைக் கொடுக்கத் தீர்ப்பளித்துள்ளனர்.
திருவண்ணாமலைஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டுக் குடநகர் என்னும் ஊரில் விக்கிரம சோழனின் ஆறாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1124) ஏற்பட்டப் பெருவெள்ளத்தின் காரணமாக ஊரும் விளைநிலமும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் இவ்வூருக்கான வரி கொடுக்க வேண்டி, இவ்வூரிலிருந்த 2000 குழி நிலத்தினை இவ்வூரார் பொது ஏலத்தில் விட்டனர். இந்நிலத்தினை இங்க நாட்டு நட்டுவாய்க் குடையான் ஆதித்தன் உய்யவந்தான் என்பவனுக்கு 25 காசுகளுக்கு இவ்வூரார் விற்றுக்கொடுத்துள்ளனர். இவன் இந்த நிலத்தினை, மடத்தினை நிர்வகிப்பதற்காக மடப்புறமாக தபஸ்வி விடையின்மேல் வருவான் என்பவனுக்கு அளித்துள்ளான். இந்நிலத்துக்கு புணற்கால், பள்ளக்கால் போன்றவற்றால் நீர்பாயவும், ஆற்றில் ஏத்தம் இட்டு இறைக்கவும், கொல்லையில் கால்வாய் வெட்டிக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலத்தின் மீதான எச்சோறு, கூற்றுநெல், வெட்டிமுட்டையாள், சென்னீரமஞ்சி போன்ற வரிகளையும் நீக்கி அளித்துள்ளனர்.
திருவண்ணாமலைசங்கர நாரணனார் என்பவர் நினைவாக அவனது தம்பி ஆதித்த குட்டியார் என்பார் இக்கோயிலில் எடுத்துள்ள ‘சங்கர நாரண ஈஸ்வர கிருகம் என்னும் கோயில் இறைவனுக்கு, இவ்வூர் வடக்கில் தென்னை மரங்கள் உள்ள நந்தவனம் ஒன்றினைத் திருவோத்தூர் சபையார் கொடுத்துள்ளனர்.
சென்னைஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து கோட்டூர் நாட்டு பிரமதேயம் வெளிச்சேரி ஆளுங்கணத்து உறுப்பினர் பத்தங்கி காளகுமார கிரமவித்தன் என்பவன் இக்கோயில் திருத்தண்டீஸ்வரர் தேவர் இறைவனுக்குத் திருநந்தா விளக்கு வைப்பதற்கு 90 ஆடுகள் கொடையளித்துள்ளான்.
சென்னைபுலியூர்க் கோட்டத்து வெளிச்சேரி ஆளுங்கணத்து நிர்வாகச் சபை உறுப்பினர் பத்தங்கி சட்ட சதுர்வேதி பட்டன் மகன் நாராயண பட்டன் என்பவன் திருத்தண்டீஸ்வரத்துத் திருக்கற்றளி மகாதேவர் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் தானமளித்துள்ளான்.