Fragments. One contains a small portion of the historical introduction of Rajendra cōlā I. Others mention the deity s name as Tirunantiśvaramuḍaiya dēvar and village s name as Vayiramekapuram alias Jananātanallur.திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது. முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி ஒரு துண்டுக்கல்வெட்டில் உள்ளது. ஊரின் பெயர் வயிரமேகபுரமான ஜனநாதநல்லூர் என்ற குறிப்பும் உள்ளது.
Fragment inscriptions. Mentions the name of the deity as Tirunantiśvaramuḍaiya dēvar.துண்டுக்கல்வெட்டுகள். திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது.
Registers the gift of one kācu per salt-pan to Bhūmīśvaram uḍaiyār temple at Rājarājapēralam in Manakkānam for a lamp by salt-pan tenants (alakkudikal) and Rāman Kumaran Cōlā Mūvēndavēlār the supervisor (kaņkāni) of Rājarāja-pēralam. The other salt- pans that existed as the boundaries and channel that irrigated it are mentioned with specific names. This gives us a picture of salt production in salt-pans on those days. The inscription has lost continuity as the flooring of the temple was raised in a later time.கோயிலின் சுற்றுத் தரைப்பகுதி பிற்காலத்தில் உயர்த்திக் கட்டப்பட்டதால் கல்வெட்டின் தொடர்ச்சி விடுபட்டுள்ளது. மனக்கானத்து இராஜராஜ பேரளத்து பூமீஸ்வரத்து இறைவனுக்கு ஒரு உப்பளத்துக் குடிகளும் கண்காணிப்பாளரான இராமன்குமரன் சோழமூவேந்தவேளாரும் விளக்கெரிக்க அளத்துக்கு ஒரு காசு வீதம் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட அளத்தின் நான்கு எல்லைகளில் அமைந்த உப்பளங்களின் பெயர்களும் அளங்களுக்கு நீர்பாய்ந்த பெருவாய்க்காலும் சொல்லப்பட்டுள்ளது.
Fragment inscription. Records the issue of title deeds by sale to the weavers (kaikōla) residing in the maḍaiviļākam of the temple.துண்டுக் கல்வெட்டு. கோயில் மடவளாகத்திலிருக்கும் நெசவாளர்களான கைக்கோளர்க்கு காணி உரிமை இறைவன் பெயரில் விலையாவணம் செய்து கொடுத்த செய்தி உள்ளது.
Records the sale of manai (housing plots) in maḍaiviļākam of Tiruvakattiśvaramuḍaiyār temple for 3 paṇam. The amount received by sale was utilised for the daily services and maintanance (pūcai tiruppani) of the temple. The verse on Candeśvara is a usual mark to denote that the order was issued in the name of the deity on behalf of temple.அகத்தீஸ்வரமுடையார் கோயில் மடைவிளாகத்தில் உள்ள மனைகளை, மனை ஒன்றுக்கு மூன்று பணம் என்று விலைக்கு விற்று அத்தொகையைக் கோயில் திருப்பணி மற்றும் வழிபாடுகளுக்குப் பயன்படுத்த எடுத்த முடிவினை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. தொடக்கத்தில் சண்டேஸ்வரர் குறித்த பாடல் உள்ளதால் இது கோயில் (இறைவன்) பேரில் எடுத்த முடிவு என்றும் தெரிகிறது.
Records an oral order of the king denoting with the term phrase Kōnēriņmai koṇḍān. This is an order of tax exemption issued on the request of Etirilicōla Sambuvarayar. Tax exemption on 10 vēli of land in Pūtēri the hamlet (pidākai) of Cevūr was given in the presence of Tiruvakattiśvaram temple authorities, Śrikariyam ceyvār, Dēvakanmis and Mähēśvarakaṇkāņi. This tax exemption copy called ulvari was issued by the land record officials varikkūru ceyvar and variyilar after registering in land register. Names of tirumantira ōlai (Royal scibe) and other officials who signed this document are mentioned. As the Etirilicōla Sambuvarāyar mentioned here is also mentioned in the next inscription of Rājādhirājā so we can fix this inscription belong to Rājādhirājā s time.இது மன்னன் பெயர் இல்லாத அரசனின் வாய்மொழி ஆணை. எதிரிலிச் சோழசம்புவரையர்கேட்டுக்கொண்டபடி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சேவூரின் பிடாகையான பூதேரியில் 10 வேலி நிலம் தேவதான இறையிலியாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்டது. சேவூரான ஸ்ரீகரணநல்லூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வரக் கண்காணிகள், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோர் முன்னிலையில் இறையிலியாகத் தந்த முடிவு நிறைவேற்றப்பட்டது. அரசு அதிகாரிகளான வரிக்கூறு செய்வார், வரியிலார், திருமந்திர ஓலை ஆகியோர் ஆணையை நிறைவேற்றிய நடைமுறையில் குறிக்கப்படுகின்றனர். அடுத்த இராஜாதிராஜன் கல்வெட்டிலும் இந்த எதிரிலிச் சோழசம்புவரையர்குறிக்கப்படுவதால் இக்கல்வெட்டு இராஜாதிராஜன் காலத்தியது எனலாம்.
When the six year old boy Karrali, son of the kuḍippalli Mamalan of Kotiyam, was wielding a sickle to cut down a tree, another seven year old boy Āmur Nakkan accidentally interrupted with his hand, got injured, and died. Māmalan, the father of the former, gifted 45 sheep towards half a perpetual lamp in Kiḍangil Tiruviraiyān temple to get rid of this sin.கொடியத்தைச் சேர்ந்த குடிபள்ளி மாமலன் என்பவரது 6 வயது மகன் கற்றளி என்ற சிறுவன் அரிவாளால் மரத்தை வெட்டியபோது செங்கீரைப்பாக்கத்தைச் சேர்ந்த குடிபள்ளி பொன் என்பவரது 7 வயதுடைய ஆமூர் நக்கன் என்ற சிறுவன் கையை நீட்ட, கையில் அரிவாள்பட்டு இறந்து போனான். இந்த பாவம் (பிரமாதம்) தீர்வதற்காக முன்னவன் தந்தை மாமலன் கிடங்கில் இறையான் கோயில் இறைவனுக்கு 12 நந்தா விளக்கு எரிக்க 45 ஆடு கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
Mentions that this inscription is a copy of an ealier record inscribed on the sōpāṇa. Records a gift of land in Ālappakkam, as tax-free, by Karikālacōla Cengēni Nādālvān alias Cengēni Cattan Nālāyiravan towards the daily worship of Citramēli Vitankar, (Natarāja) set up by him. The boundaries along the four cardinal directions are mentioned. Provisions required for daily offerings and their cost in paddy are enumerated.ஒரு பழையக் கல்வெட்டினைப் படியெடுத்து சோபானத்தில் வெட்டியதன் நகல் இது. செங்கேனி சாத்தன் நாலாயிரவனான கரிகாலச் செங்கேணி நாடாழ்வான் தான் எழுந்தருளுவித்த சித்திரமேழி விடங்கர் என்னும் நடராஜருக்கு நித்திய வழிபாட்டிற்காக ஆலப்பாக்கம் என்ற ஊரினை விலைக்குப் பெற்று இறையிலியாகக் கொடுத்துள்ளார். இதன் நான்கு எல்லைகள் சொல்லப்படுகின்றன. வழிபாட்டிற்கு வேண்டிய பொருள்களும், அவற்றிற்கு இணையான நெல்லும் பட்டியலிட்டுச் சொல்லப்பட்டுள்ளன.
Registers an order of Tattakai Nāyakar of Kantādu issued in the auspicious name of Candēśvarar to a kaikkōlar Appanāyan permitting to set up an image of Tirukatirvel Pillaiyar (Lord Muruga). For that he was granted to receive certain privileges. Tax revenue from tarikaṭamai was also granted. This document was written by Citramēli Bhattar being dictated by the temple s Māheśvarar.கந்தாடு உடையார் தாதகை நாயகர் திருவாய் மொழிந்தருளினபடி சண்டேஸ்வரர் ஆணை குறித்த பாடலுடன் இக் கல்வெட்டு தொடங்குகிறது. சண்டேஸ்வரர் பெயரில் ஓலை (ஆணை) வழங்கப்பட்டு இக்கோயிலைச் சேர்ந்த தர்மதாவளத்து கைக்கோளன் அப்பனாயன் (தண்டமாராயன்) என்பவர் கோயிலில் திருகதிர்வேள் பிள்ளையாரை (முருகன்) அவருடைய உபயமாக பிரிதிஷ்டை செய்துகொள்ள அனுமதித்து அவருக்கு உரிய மரியாதைகள் அளிக்க முறை செய்யப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது. தறிக்கடமை என்ற வரி வருவாயும் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலிலிருந்த மாகேஸ்வரர்கள் சொல்லி சித்திரமேழி பட்டர் என்பவர் இறைவன் பெயரால் இந்த ஆவணம் எழுதியுள்ளார்.
Name of the village is mentioned as Ōkantur of Aramirangā Ōymānādu. Records gift of a village named Cirunavalur as a tax-free tirunāmattukkāņi to the temple of Tiruvimisvaramuḍaiyār to meet the daily services and maintain expenses. Village boundaries were marked with boundary stones bearing symbols of trident (culakkal) and the symbols of cittiramēli periya nāṭṭār pasumpai, caturamuti etc. Even though Näṭṭār were mentioned as nagaraikāṭṭu parru nāṭṭavar in this inscription, it is evident from the symbols of boundry stones that they are organized as cittiramēli periya nāṭṭār.ஊரின்பெயர் அறமிறங்காஒய்மாநாட்டு ஓகந்தூர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் திருவீமீஸ்வரமுடையார் கோயில் இறங்கல் மீட்ட நாயனாரின் வழிபாடு மற்றும் திருப்பணிகளுக்காக சிறுநாவலூர் என்ற ஊர் இறைவனது பெயரில் திருநாமத்துக் காணியாக வழங்கப்பட்டு நாடு அமைப்பினரது வரிகள் நீக்கித் தரப்பட்டுள்ளன. ஊரின் நில எல்லைகளில் சூலக்கல்லும் சித்திரமேழியாரின் ஏர், பசும்பை, சதிரமுடி ஆகிய சின்னங்களின் பொறிப்பும் இடப்பட்டு வழங்கப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது. சம்புவராயரின் 16 ஆவது ஆட்சியாண்டு முதல் சிறுநாவலூருக்குரிய வரிகளை நாட்டார் ஏற்றுக் கொண்டு வரிவருவாய்களை கோயிலுக்குத் தந்துள்ளனர். நாட்டார் நகரைக் காட்டுப் பற்று நாட்டவர் எனக் குறிப்பிட்டபோதிலும் எல்லைக் கல்லில் சித்திரமேழியினரின் குறியீடுகள் பொறிப்பதால் இவர்கள் சித்திரமேழி பெரிய நாட்டார் என்பது தெளிவு.
Records an endowment of 17 pieces (tati) of land as dēvadäna tirunāmattukkāni to Okūr s Agattiśvaramuḍaiyar temple, towards Cittirai festival celebrations for Cittiramēli Vitankar (procession idol) and for temple maintenance (tiruppani) by the nāṭṭavar of Ōymā-nāḍu. The lands were given free of taxes. Many have signed this document.ஓகூர் அகத்தீஸ்வரமுடையாருக்கு தேவதான திருநாமத்துக்காணியாக 17 துண்டு (தடி) நிலங்கள் வழங்கப்பட்டுக் கோயிலில் உள்ள சித்திரமேழி விடங்கர்க்கு (செப்புத் திருமேனி) சித்திரைத் திருவிழா, வழிபாடுகள் மற்றும் திருப்பணிச் செலவுகள் செய்ய முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வரிநீக்கி இறையிலியாகத் தரப்பட்டமையால் பல அரசு அலுவலர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
Fragment. Mentions the deity s name as lyamatankisvarar. Records some provisions for the early morning services (cirukālai sandhi).துண்டுக்கல்வெட்டுகள். இறைவன் பெயர் இயமதங்கீஸ்வரர் என்ற குறிப்பும், சிறுகாலைச் சந்தி வழிபாட்டுக் குறிப்பும் உள்ளன.
Fragments. Records the irrigation facilities done by one Lakshmanan. He constructed a new channel by blocking the river channel across and allowing the water to flow into the lake. Names such as Nāvitan kilvīti, Paruntādi vāykkäl, Kongarāyar, Dēvaraḍiyāl, Alaivāykantar are mentioned while giving details of some foundries. Name of the deity is mentioned as Ematargiśvarar. Tiruvulla cirumuri cīttu (divine will by lot) is also mentioned.லெக்ஷமணன் என்பவர் ஆற்று வாய்க்காலை குறுக்கே அடைத்து புது வாய்க்கால் அமைத்து ஏரிக்கும் பிற பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் பாயும்படி அமைத்த செய்தி சொல்லப்படுகிறது, நாவிதன் கீழ்வீதி, பருந்தாடி வாய்க்கால், கொங்கராயர், தேவரடியாள், அலைவாய் கந்தர் முதலிய பெயர்களும் காணப்படுகின்றன. இறைவனின் பெயர் எமதங்கீஸ்வரர் என்றுள்ளது. திருவுள்ளச் சிறுமுறிச் சீட்டு சொல்லப்பட்டுள்ளது.
Records gift of a perpetual lamp by Pērāļan karrali of Olukkai vadagarai, the southern hamlet of Rājarāja chaturvēdimangalam for the merit of his wife Nandi Brāhmaṇi.ஜயங்கொண்ட சோழ மண்டலத்து பனையூர் நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதான ஊரான திருவாமாத்தூர் பரமசுவாமிகள் இறைவனுக்கு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து தென்பிடாகை (தெற்கிலுள்ள புறஊர்) ஒழுக்கை ஊரைச் சார்ந்த பேராளன் கற்றளி என்பவன் தனது மனைவி நந்தி பிராமணி என்பாளின் நலன் வேண்டி திருநந்தா விளக்கு ஒன்று வைத்துள்ளான்.
States that Kondama-Nāyaka visited the Abiramisvara temple at Tiruvāmāttür and made a gift of 1600 pon for the panguni festival and for the repairs to the temple gōpura, in addition to the existing income 450 pon and 2000 kalam paddy of the temple.கொண்டம நாயக்க அய்யன் திருவாமாத்தூர் கோயிலுக்கு வருகை தந்து வழிபாட்டு முறைகளைக் கேட்டறிந்தார். இக்கோயிலுக்கு இருபது கிராமங்களின் மூலம் 450 பொன்னும், 2000 கலம் நெல்லும் வழிபாட்டுச் செலவினங்களுக்கு செலவிடப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர். இவையன்றி கூடுதலாக கொண்டம நாயக்கர் தன் சார்பாக 1600 பொன் அளித்து திருவாமாத்தூர் அபிராமீசுவரர் இறைவனுக்கு இவர் பெயரால் விசேடப் பூசை, பங்குனித் திருநாள், கோயில் திருப்பணி ஆகியவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆணை பிறப்பித்துள்ளார்.
Damaged at the end of the inscription. Records the provision made by Virappan for the merit of Surappa-nayaka for bathing the god Alagiya-Nāyanār with ghee on the day of the tiruvatirai festival.சூரப்பநாயக்கர் நலன் வேண்டி திருவாமாத்தூர் அழகிய நாயனார் இறைவனுக்குத் திருவாதிரை திருநாள் அன்று நெய் அபிடேகம் செய்வதற்கு வீரப்பன் என்பவர் வழிவகைச் செய்துள்ளார்.
Records the tax-free gift of the village Sirrāmūr in Idaiyaṛru-parru by Sinnara-pillai under orders from Ramabhaṭṭarayyan on behalf of the king for the express connected with offerings and worship to the god Alagiya-Nāyanār.விசயநகர அரசர் அச்சுதயதேவ மகாராசா சார்பாக இராமபட்டர் அய்யன் உத்தரவின் பேரில் சின்னார பிள்ளை என்பவர் திருவாமாத்தூர் அழகிய நாயனார் இறைவனுக்கு வழிபாடு மற்றும் பூசை ஆகியவற்றினை செய்வதற்குத் தேவையான செலவினங்களுக்காக இடையாற்றுப் பற்றில் உள்ள சிற்றாமூர் ஊரினை இறைநீக்கித் தானமாக வழங்கியுள்ளார்.
Registers the tax-free gift of the village Śūraipaṭṭu in Alagiya Sīyanallūr-paṛṛu in the müttakūṛu by Nārāyaṇa pillai under orders from Rāmābhaṭṭayyan for festivals, worship and offerings of curd-rice to the god Alagiya Nāyaṇār at Tiruvāmāttūr, at independent village in Vāvalūr-nāḍu, a sub division of Rājarāja vaļanāḍu on behalf of the king.விசயநகர அரசர் அச்சுதயதேவ மகாராசாவின் சார்பாக ராமாபட்டய்யன் ஆணைப்படி நாராயணப் பிள்ளை என்பவரால் இராஜராஜ வளநாட்டு வாவலூர் நாட்டுத் தனியூர் திருவாமாத்தூர் கோயில் இறைவனுக்குப் பூசை, திருப்பணி, தெத்தியோதனம் மற்றும் அங்கரங்க வைபோகம் பூசை ஆகியவற்றிற்காக சீயநல்லூர் பற்றில் அமைந்துள்ள சூறைப்பட்டு கிராமம் இறை நீக்கித் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
Records a tax-free gift of the village Kulattür alias Chōlinga-nallur in Alagiyasiyanallur-parru for conducting a service called Rājanārāyanaṇ śandi and offerings and worship in the god of Muttai vepra muruvalar by the king.சம்புவராய மன்னன் இராசநாராயணன் திருவாமாத்தூர் கோயில் தானத்தார்க்கு அளித்த ஆணை இது. நாச்சியார் முத்தை வென்ற முறுவலார் கோயிலில் ஏற்படுத்தப்பட்ட இராசநாராயணன் சந்தி வழிபாட்டுச் செலவினங்களுக்காக அழகிய சீயநல்லூர் பற்றில் உள்ள குளத்தூர் என்கிற சோழிங்க நல்லூர் ஊர் நிலங்கள் இறை நீக்கித் தானமளிக்கப்பட்டுள்ளது.
Records that Viṭṭalar Ōbalunathar and certain others leased some lands in Chōlinga- nallūr alias Rājanārāyaṇa nallūr belonging to the goddess Nachchiyār Muttai venţa muruvalar and agreed to pay an annual rent to the temple treasury.நாச்சியார் முத்தை வென்ற முறுவலார் என்ற இக்கோயில் இறைவிக்கு திருநாமத்துக்காணியாக விளங்கிய சோழிங்க நல்லூர் ஆன இராசநாராயண நல்லூர் ஊர் நிலங்களை விட்டலர் ஓபளூநாதர் மற்றும் சிலர் குத்தகையாக விலைப்பிரமாணம் பண்ணிக்கொண்டு ஆண்டு தோறும் உரிய தொகையை பண்டாரத்தில் செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.