54 results found
விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் ஓய்மா நாட்டு பட்டின நாட்டு மநக்கானம், ராஜராஜப்பேரளம் என்ற பெயருடன் விளங்கியிருக்கிறது. இங்கமைந்த திருப்பூமீஸ்வரமுடையார் கோயிலுக்கு உப்பளக்குடிகளும், இந்த அளத்துக் கணக்கு கண்காணிநாயகம் செய்கின்ற ஆதித்தன் என்பவரும் விளக்கு எரிப்பதற்காக ஒரு உப்பளத்தின் வரிவருவாயினை வழங்கியுள்ளனர். இதனை நான்கு சிவபிராமணர்கள் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.விழுப்புரம்>மரக்காணம்>மரக்காணம்
விழுப்புரம் கோயிலின் சுற்றுத் தரைப்பகுதி பிற்காலத்தில் உயர்த்திக் கட்டப்பட்டதால் கல்வெட்டின் தொடர்ச்சி விடுபட்டுள்ளது. மனக்கானத்து இராஜராஜ பேரளத்து பூமீஸ்வரத்து இறைவனுக்கு ஒரு உப்பளத்துக் குடிகளும் கண்காணிப்பாளரான இராமன்குமரன் சோழமூவேந்தவேளாரும் விளக்கெரிக்க அளத்துக்கு ஒரு காசு வீதம் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட அளத்தின் நான்கு எல்லைகளில் அமைந்த உப்பளங்களின் பெயர்களும் அளங்களுக்கு நீர்பாய்ந்த பெருவாய்க்காலும் சொல்லப்பட்டுள்ளது.விழுப்புரம்>திண்டிவனம்>கிழ்சேவூர்
விழுப்புரம் இது மன்னன் பெயர் இல்லாத அரசனின் வாய்மொழி ஆணை. எதிரிலிச் சோழசம்புவரையர்கேட்டுக்கொண்டபடி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சேவூரின் பிடாகையான பூதேரியில் 10 வேலி நிலம் தேவதான இறையிலியாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்டது. சேவூரான ஸ்ரீகரணநல்லூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வரக் கண்காணிகள், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோர் முன்னிலையில் இறையிலியாகத் தந்த முடிவு நிறைவேற்றப்பட்டது. அரசு அதிகாரிகளான வரிக்கூறு செய்வார், வரியிலார், திருமந்திர ஓலை ஆகியோர் ஆணையை நிறைவேற்றிய நடைமுறையில் குறிக்கப்படுகின்றனர். அடுத்த இராஜாதிராஜன் கல்வெட்டிலும் இந்த எதிரிலிச் சோழசம்புவரையர்குறிக்கப்படுவதால் இக்கல்வெட்டு இராஜாதிராஜன் காலத்தியது எனலாம்.விழுப்புரம்>விக்கிரவாண்டி>திருவாமத்தூர்
விழுப்புரம் மருந்தன் அரசன் இராஜநாராயணன் ஆன இராஜராஜ மூவேந்தரையன் என்னும் அதிகாரி இக்கோயில் பண்டாரத்தில் இருந்த ஆபரணங்களை இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் தாமப்பட்டர், ஜநநாதச் சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் வட்டமணி பட்டர், இக்கோயில் நிர்வாகிகளான ஸ்ரீமாகேசுவரக் கண்காணி, ஸ்ரீகாரியம், தேவர்கன்மி, கோயிற் கணக்கன், பக்தர்கள், இரு உள்ளூர் வியாபாரிகள் ஆகியோர் முன்னிலையில் பரிசோதித்து அந்த ஆபரணங்களை உருக்கி புதிதாக ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளச் செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.விழுப்புரம்>விக்கிரவாண்டி>திருவாமத்தூர்
விழுப்புரம் அருவா நாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் ஊரிலுள்ள பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்கெரிக்க அறிவாளன் கேணி எனும் செம்பியன் கட்டிமானடிகள் என்பவன் இருபது கழஞ்சுப் பொன்னினை திருவாமாத்தூர் சபையாரிடம் அளித்து தினம் உரி அளவு நெய் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளான். திருவாமாத்தூர் சபையாரும், ஊராரும் இரண்டு நந்தா விளக்குகளைத் தொடர்ந்து எரிப்பதை கட்டிமான்கள், கட்டிமாப்பாத்தி நாட்டார், வாவலூர் நாட்டார் மற்றும் பன்மாகேசுவரர்கள் ஆகியோர் கண்காணிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலில் திருச்சுற்று மண்டபம் செம்பியன் கட்டிமானால் எடுக்கப்பட்டுள்ளது. பாடிகாவல் வரியினை இக்கோயிலில் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ளும் திருஅலகு, திருமெழுக்கு செய்வார்களுக்கு அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருவெண்ணெய்நல்லூர்>திருவெண்ணைநல்லூர்
விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர்க்கு நுந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு பொன்னும், அவ்விளக்கு எரிப்பதற்குரிய இரண்டு நிலை குத்துவிளக்கு ஒன்றும் விசையூரிலிருக்கும் செய்ய சாமந்தன் காங்கேயன் என்பவர் வழங்கியுள்ளார். இவற்றைப் பெற்றுக்கொண்ட இக்கோயில் சிவபிராமணர்கள் இத்திருநுந்தா விளக்கு எரிக்கச் சம்மதித்து உள்ளனர்.இந்த நுந்தாவிளக்கு கோயிலில் தவறாமல் எரிக்கப்படுகிறதா என்பதை இக்கோயிலில் தினந்தோறும் பூசிக்கும் நம்பிமார்கள், கவனித்து பூசிக்க வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்குத் தட்சிணையாக ஒன்றேகால் கழஞ்சு பொன் அளிக்கப்பட்டது. இந்த நுந்தாவிளக்கைத் தவறாமல் எரிப்பிக்கச் செய்யும் பணியை கோயிலில் மாகேஸ்வரக் கண்காணி செய்வார்களும், தேவகந்மிகளும், கோயில் கணக்கநும் சந்திதோறும் ஆராய்ந்து செய்ய வேண்டும். அதற்காக இவர்களுக்கு அரைக்கழஞ்சே மஞ்சாடி பொன் தட்சிணையாக அளிக்கப்பட்டது போன்ற செய்திகளைக் கூறுகிறது இக்கல்வெட்டு.