54 results found
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Records gift of taxes on a salt-pan for two lamps to the temple of Tiruppumīccuramuḍaiyār at Manakkānam. Marakkāṇam is mentioned as Manakkāṇam alias Rājarājapēralam in Pattinanāḍua sub division of Ōyma-nāḍu, by the tenants (alakkuḍikal) and Ātittan the superintendent of accounts of the salt pan (alattukku kaṇakku kaṇkāņi nāyakam). Four Śivabrāhmaṇās have agreed to light the lamp. ஓய்மா நாட்டு பட்டின நாட்டு மநக்கானம், ராஜராஜப்பேரளம் என்ற பெயருடன் விளங்கியிருக்கிறது. இங்கமைந்த திருப்பூமீஸ்வரமுடையார் கோயிலுக்கு உப்பளக்குடிகளும், இந்த அளத்துக் கணக்கு கண்காணிநாயகம் செய்கின்ற ஆதித்தன் என்பவரும் விளக்கு எரிப்பதற்காக ஒரு உப்பளத்தின் வரிவருவாயினை வழங்கியுள்ளனர். இதனை நான்கு சிவபிராமணர்கள் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Registers the gift of one kācu per salt-pan to Bhūmīśvaram uḍaiyār temple at Rājarājapēralam in Manakkānam for a lamp by salt-pan tenants (alakkudikal) and Rāman Kumaran Cōlā Mūvēndavēlār the supervisor (kaņkāni) of Rājarāja-pēralam. The other salt- pans that existed as the boundaries and channel that irrigated it are mentioned with specific names. This gives us a picture of salt production in salt-pans on those days. The inscription has lost continuity as the flooring of the temple was raised in a later time. கோயிலின் சுற்றுத் தரைப்பகுதி பிற்காலத்தில் உயர்த்திக் கட்டப்பட்டதால் கல்வெட்டின் தொடர்ச்சி விடுபட்டுள்ளது. மனக்கானத்து இராஜராஜ பேரளத்து பூமீஸ்வரத்து இறைவனுக்கு ஒரு உப்பளத்துக் குடிகளும் கண்காணிப்பாளரான இராமன்குமரன் சோழமூவேந்தவேளாரும் விளக்கெரிக்க அளத்துக்கு ஒரு காசு வீதம் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட அளத்தின் நான்கு எல்லைகளில் அமைந்த உப்பளங்களின் பெயர்களும் அளங்களுக்கு நீர்பாய்ந்த பெருவாய்க்காலும் சொல்லப்பட்டுள்ளது.விழுப்புரம்>திண்டிவனம்>கிழ்சேவூர்
Records an oral order of the king denoting with the term phrase Kōnēriņmai koṇḍān. This is an order of tax exemption issued on the request of Etirilicōla Sambuvarayar. Tax exemption on 10 vēli of land in Pūtēri the hamlet (pidākai) of Cevūr was given in the presence of Tiruvakattiśvaram temple authorities, Śrikariyam ceyvār, Dēvakanmis and Mähēśvarakaṇkāņi. This tax exemption copy called ulvari was issued by the land record officials varikkūru ceyvar and variyilar after registering in land register. Names of tirumantira ōlai (Royal scibe) and other officials who signed this document are mentioned. As the Etirilicōla Sambuvarāyar mentioned here is also mentioned in the next inscription of Rājādhirājā so we can fix this inscription belong to Rājādhirājā s time. இது மன்னன் பெயர் இல்லாத அரசனின் வாய்மொழி ஆணை. எதிரிலிச் சோழசம்புவரையர்கேட்டுக்கொண்டபடி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சேவூரின் பிடாகையான பூதேரியில் 10 வேலி நிலம் தேவதான இறையிலியாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்டது. சேவூரான ஸ்ரீகரணநல்லூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வரக் கண்காணிகள், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோர் முன்னிலையில் இறையிலியாகத் தந்த முடிவு நிறைவேற்றப்பட்டது. அரசு அதிகாரிகளான வரிக்கூறு செய்வார், வரியிலார், திருமந்திர ஓலை ஆகியோர் ஆணையை நிறைவேற்றிய நடைமுறையில் குறிக்கப்படுகின்றனர். அடுத்த இராஜாதிராஜன் கல்வெட்டிலும் இந்த எதிரிலிச் சோழசம்புவரையர்குறிக்கப்படுவதால் இக்கல்வெட்டு இராஜாதிராஜன் காலத்தியது எனலாம்.விழுப்புரம்>விழுப்புரம்>திருவாமத்தூர்
It states that Maruntan Arasan Rājanārāyaṇan alias Rājarāja Mūvēndaraiyaṇ inspected the temple jewels and in the presence of certain members of the assemblies of Rājarāja chaturvēdimangalam, Jananātha chaturvēdimangalam, officers of the temple, devotees and a local merchant had them melted and got certain new ornaments made of gold for the god. மருந்தன் அரசன் இராஜநாராயணன் ஆன இராஜராஜ மூவேந்தரையன் என்னும் அதிகாரி இக்கோயில் பண்டாரத்தில் இருந்த ஆபரணங்களை இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் தாமப்பட்டர், ஜநநாதச் சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் வட்டமணி பட்டர், இக்கோயில் நிர்வாகிகளான ஸ்ரீமாகேசுவரக் கண்காணி, ஸ்ரீகாரியம், தேவர்கன்மி, கோயிற் கணக்கன், பக்தர்கள், இரு உள்ளூர் வியாபாரிகள் ஆகியோர் முன்னிலையில் பரிசோதித்து அந்த ஆபரணங்களை உருக்கி புதிதாக ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளச் செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.விழுப்புரம்>விழுப்புரம்>திருவாமத்தூர்
Records the gift of 20 kalañju of gold for burning two perpetual lamps in the Perumaṇaḍigal temple at Tiruvāmāttūr, a dēvadāna in Vāvalūr-nāḍu in the mīvāļi of Aruvā- nāḍu by Aṛivālan kēņi alias Chembiyan Kaṭṭimāṇaḍikal. The gift was entrusted to the sabha and ur of Tiruvāmattūr and was placed under the protection of the kaṭṭimāns the kaṭṭi māppātti nāṭṭārs, the nāḍu of Vāvalur -nāḍu and the paṇmāhēśvarās. It also refers to the construction of a compound wall to the temple and the gift of the pāḍikāval- kūli for the maintenance of the cleaners (tirualagu, tirumelukku iḍuvar) by the same donor. அருவா நாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் ஊரிலுள்ள பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்கெரிக்க அறிவாளன் கேணி எனும் செம்பியன் கட்டிமானடிகள் என்பவன் இருபது கழஞ்சுப் பொன்னினை திருவாமாத்தூர் சபையாரிடம் அளித்து தினம் உரி அளவு நெய் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளான். திருவாமாத்தூர் சபையாரும், ஊராரும் இரண்டு நந்தா விளக்குகளைத் தொடர்ந்து எரிப்பதை கட்டிமான்கள், கட்டிமாப்பாத்தி நாட்டார், வாவலூர் நாட்டார் மற்றும் பன்மாகேசுவரர்கள் ஆகியோர் கண்காணிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலில் திருச்சுற்று மண்டபம் செம்பியன் கட்டிமானால் எடுக்கப்பட்டுள்ளது. பாடிகாவல் வரியினை இக்கோயிலில் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ளும் திருஅலகு, திருமெழுக்கு செய்வார்களுக்கு அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of gold and a lamp-stand by Seyyasamanthan Gängeyan of Visaiyur for burning a perpetual lamp to the temple. திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர்க்கு நுந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு பொன்னும், அவ்விளக்கு எரிப்பதற்குரிய இரண்டு நிலை குத்துவிளக்கு ஒன்றும் விசையூரிலிருக்கும் செய்ய சாமந்தன் காங்கேயன் என்பவர் வழங்கியுள்ளார். இவற்றைப் பெற்றுக்கொண்ட இக்கோயில் சிவபிராமணர்கள் இத்திருநுந்தா விளக்கு எரிக்கச் சம்மதித்து உள்ளனர்.இந்த நுந்தாவிளக்கு கோயிலில் தவறாமல் எரிக்கப்படுகிறதா என்பதை இக்கோயிலில் தினந்தோறும் பூசிக்கும் நம்பிமார்கள், கவனித்து பூசிக்க வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்குத் தட்சிணையாக ஒன்றேகால் கழஞ்சு பொன் அளிக்கப்பட்டது. இந்த நுந்தாவிளக்கைத் தவறாமல் எரிப்பிக்கச் செய்யும் பணியை கோயிலில் மாகேஸ்வரக் கண்காணி செய்வார்களும், தேவகந்மிகளும், கோயில் கணக்கநும் சந்திதோறும் ஆராய்ந்து செய்ய வேண்டும். அதற்காக இவர்களுக்கு அரைக்கழஞ்சே மஞ்சாடி பொன் தட்சிணையாக அளிக்கப்பட்டது போன்ற செய்திகளைக் கூறுகிறது இக்கல்வெட்டு.