Skip to main content

8544 results found

விழுப்புரம்>திண்டிவனம்>வைரவபுரம்
Fragments. One contains a small portion of the historical introduction of Rajendra cōlā I. Others mention the deity s name as Tirunantiśvaramuḍaiya dēvar and village s name as Vayiramekapuram alias Jananātanallur. திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது. முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி ஒரு துண்டுக்கல்வெட்டில் உள்ளது. ஊரின் பெயர் வயிரமேகபுரமான ஜனநாதநல்லூர் என்ற குறிப்பும் உள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>வைரவபுரம்
Fragment inscriptions. Mentions the name of the deity as Tirunantiśvaramuḍaiya dēvar. துண்டுக்கல்வெட்டுகள். திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது.
விழுப்புரம்>திண்டிவனம்>விக்கிரவாண்டி
Registers tax exemption to madaivilākam. திருமடைவிளாகத்திற்கான வரிகள் நீக்கப்பட்டமை.
விழுப்புரம்>திண்டிவனம்>விக்கிரவாண்டி
Records the gift of a land by the merchant Centanur Alvān Nakkan Arivaikal Karpakavēlān acquired from Nagarattar to the sivabrāhmanās of the temple towards a perpetual lamp. பின்பகுதி சிதைந்த கல்வெட்டு. வியாபாரி சேந்தனூர் ஆழ்வான் நக்கன் அறிவைகள் கற்பகவேளான் என்பவர் நந்தா விளக்கெரிக்க நகரத்தாரிடம் நிலம் (?) பெற்றுக் கோயில் சிவபிராமணரிடம் கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
விழுப்புரம்>திண்டிவனம்>விக்கிரவாண்டி
Multilated. Name of the temple is mentioned as Cētikula Cintamanīśvaram. Mentions the abraded condition of ritual utensils ceppuk kiṭāram and ceppuk kutam. சிதைந்து பிரிந்து போன கல்வெட்டு. கோயிலின் பெயர் சேதிகுல சிந்தாமணீஸ்வரம் என்றுள்ளது. பூசைக் கலன்கள் செப்பு கிடாரம், செப்புக்குடம் ஆகியவை தேய்ந்து போனமை குறித்த செய்தி சொல்லப்படுகிறது.
விழுப்புரம்>திண்டிவனம்>விக்கிரவாண்டி
Incomplete. Contains only the historical introduction and regnal year of Vikkirama Cōlā. விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தி மற்றும் ஆண்டுக் குறிப்பு மட்டும் உள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>வடசிறுவளூர்
Records the construction of a irrigation out-let (mataku) in the tank called Ciruvaiyēri by one Mānparipālan Mallai Kalinkan. பாடல் வடிவில் உள்ளது. தேன் நிறைந்த மலர்ச் சோலைகளும் கரும்பு வயல்களும் நிறைந்த அழகிய சிறுவை என்னும் ஊரின் ஏரிக்கு மல்லைக்கலிங்கன் மான்பரிபாலன் என்பவர் மதகு அமைத்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Mentions some donation by one Sivappa. புத்தளம் என்ற உப்பளத்தின் பாதுகாவலராக இருந்த சிவப்பர் கொடுத்த கொடையினைக் குறிக்கிறது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Mentions the completion of restoration by the perpetual devotion of one Arpakkilar Alakiyanāyan of Nelvay. தாது வருடம், பொ.ஆ.1684 அல்லது1756-ல் நெல்வாய் ஆற்பாக்கிழார் அழகிய நாயன் என்பவர் இக்கோயிலைத் திருப்பணி செய்துள்ளார்.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragment. Mentions that of some services that were discontinued were now restored by the decision of nättar and ūrār. துண்டுக் கல்வெட்டு. நாட்டாரும் ஊராரும் கூடி நடைபெறாமல் நின்று போன ஒரு வழிபாட்டினை(?) நிகழச்செய்தமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragments. Contains a portion of the historical introduction of Rajendra Cōla, I. Mention of the consent of Sivabrāhmanās to provide food offerings. அடுத்தடுத்து வைத்துக் கட்டப்பட்ட துண்டுக் கல்வெட்டுகள். இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி உள்ளது. வழிபாட்டு அமுது படையல் செய்ய சிவபிராமணர்கள் ஒப்புக்கொண்டமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Record the gift of a tax from salt pan, alaccirupādu for the worship and lamp. விளக்கெரித்தல் மற்றும் வழிபாடுகளுக்காக உப்பளத்தின் வரிவருவாய் வழங்கப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Gift of a village named Putuppattu by Nakayyan towards worship and maintenance of the temple, for the well-being of Rāmapattar Ayyan. இராமபட்டர் அய்யன் நலத்திற்காக வழிபாடு மற்றும் திருப்பணிகள் நடத்திடப் புதுப்பட்டு என்ற கிராமம் வழங்கப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragment. Contains portions of historical introduction of Rājādhirāja I. துண்டுக்கல்வெட்டு. முதலாம் இராசாதிராசனின் மெய்க்கீர்த்திப் பகுதி உள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragments. Contains portions of the historical introduction (meykirtti) of Rājādhirāja I. A land named after a pot-dancer(kudakkūttan bhūmi) is mentioned. துண்டுக்கல்வெட்டுகள். முதலாம் இராசாதிராசனின் மெய்க்கீர்த்திப் பகுதிகள் உள்ளன.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragments. Mentions gift of cows (surapi) for a perpetual lamp and 3 kalañju pon for food offerings or some other expenses concerned to temple kitchen (madaippalli). துண்டுக் கல்வெட்டுகள். நந்தா விளக்குத் தொடர்பாகப் பசுக்கள் (ஸுரபி) கோயில் நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragment inscription. Mentionsgift of a lamp. Eyirpattinam was known as Vikramacōlā caturvētimangalam. துண்டுக் கல்வெட்டு. விளக்குக் கொடை குறிக்கப்பட்டுள்ளது. எயிற்பட்டினம் விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragment inscription. Rājarāja pēralam (salt-pan) is mentioned. துண்டுக்கல்வெட்டு. இராஜராஜப் பேரளம் குறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Fragment inscription. Contains only a part of the historical introduction (meykirti) of Kulöttunga II. துண்டுக் கல்வெட்டு. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியின் ஒருபகுதி மட்டும் உள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Records the gift of eight salt-pans called Cellapillaiyār alam alias Emperumal alam to Tirupūmīccuramuḍaiya nayinār temple at Marakkānam alias Gandarātitta nallūr. செல்லபிள்ளையார் அளம் என்ற எட்டு உப்பு அளங்கள் தர்மதானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது.