தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (கீழைக்-திருக்காட்டுப்பள்ளி 1 results found)
கீழைக் திருக்காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளி யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று காவிரியாறு கடலிற் பாயும் இடத்திற்கு அணித்ததாக உள்ளது.

பலபல வாய்த்தலை யார்த்து மண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின் வாய்க் கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
என்று அதன் வளத்தைக் குறித்தருளினார் திருஞான சம்பந்தர். பாடல் பெற்ற திருவெண் காட்டுக்கு மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள இக்காட்டுப் பள்ளி, இப்பொழுது ஆரணியேசுரர் கோயிலென வழங்குகின்றது.