தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (சம்பங்கி-நல்லூர் 1 results found)
சம்பங்கி நல்லூர்

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஊர் ஒன்று சம்பங்கி நல்லூர் என வழங்கப் படுகின்றது. செண்பகப் பெருமாள் நல்லூர் என்னும் பெயரே இங்ஙனம் சிதைந்துள்ள தென்பது கல்வெட்டுக்களால் விளங்கும். 23 வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்தில் சோழிங்கர் என்ற ஊர் உள்ளது. சோழ சிம்மபுரம் என்னும் பெயரே அவ்வாறு மருவிற்றென்று குரு பரம்பரை கூறும்24 அவ்வூரிலுள்ள கடிகாசலம் சோழிங்கர் என்ற குன்றின் மீது கோயில் கொண்டுள்ள நரசிங்கப் பெருமாளை பேயாழ்வாரும், திருமங்கை யாழ்வாரும் பாடியுள்ளார்கள். இந் நாளில் கடிகாசலப் பெருமாள் கோவில் சாலச் சிறப்புற்று விளங்குகின்றது.

23. S. I. I. , p. 74.
24. சோழலிங்கபுரம் என்ற பெயரே சோழங்கிபுரம் ஆயிற்றென்றும் கூறுவர். (N. A, Manual. II, p. 435) அவ்வூரின் நடுவே உள்ள சோழேச்சுரத்திலுள்ள சுயம்பு லிங்கம் அதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது.