தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருவெண்ணெய்-நல்லூர்-அருட்டுறை 1 results found)
திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை

பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் ஈசன் கோயில் கொண்டருளும் இடம் அருட்டுறை எனப்படும். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தியை ஆட்கொண்ட துறை அவ் அவர் தேவாரத்தால் அறியலாம். வருட்டுறையேயாகும். இதனை பித்தா பிறைசூடி என்று அவர் எடுத்த திருப்பதிகத்தில் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா என்று பாடும் பான்மையால் ஆண்டவன் உறைவிடம் அருட்டுறை என்றும் போற்றப்படுகின்றது. 17

17. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டியும் கோயிலடியாகப் பிறந்த ஊர்ப்பெயராகத் தெரிகின்றது. திருத்துறையென்ற ஆலயத்தையுடைய பூண்டி திருத்துறைப்பூண்டியாயிற்று போலும்; 477 of 1912. இவ்வாறன்றித் திருத்தருப்பூண்டி யென்னும் பெயரே திருத்துறைப்பூண்டியெனத் திரிந்தது என்று கொள்வாரும் உளர்.