தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (நல்லூர்-பெருமணம் 1 results found)
நல்லூர் பெருமணம்

சைவ உலகம் தலைக் கொண்டு போற்றும் திருத் தொண்டராகிய திருஞான சம்பந்தர் இறைவனது சோதியிற் கலந்த இடம் நல்லூர்ப் பெருமணம் என்று அவர் வரலாறு கூறுகின்றது. நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் பெயர் பெருமணம் என்பதாகும்.

நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன் தாள் தொழ வீடெளி தாமே.
என்று திருஞான சம்பந்தர் பாடுதலால் இவ்வுண்மை விளங்கும். பெருமணம் என்னும் சிறந்த திருக்கோயிலைத் தன்னகத்தே யுடைய நல்லூர், பெருமணநல்லூர் என்றும் வழங்கலாயிற்று. இந் நாளில் அப் பழம் பெயர்கள் மறைந்து ஆச்சாபுரம் என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது.