கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (நாடுகண்காணி-நாயகம் 1 results found)

நாடுகண்காணி நாயகம்

:
  • சோழராட்சியில். அரசு அமைத்த நாட்டு அதிகாரிகளின் செயல்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன். இவ்வதிகாரி எவ்விடத்தும், யாரிடமும், எக் கணக்கினையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி பெற்றவன்.

  • இந்நாடு உள்ளிட்ட நாடுகள் கண்காணி நாயகம் செய்கின்ற வைப்பூர் உடையான்

  • முதல் இராசராசன்

  • தெ. கல். தொ. 18. கல். 328

  • திருக்கோவலூர் திருவீரட்டானமுடைய மஹாதேவர் ஸ்ரீ பண்டாரம், இன்னாடு கண் காணி நாயகஞ் செய்யும் இளமங்கல முடையான நிச்சல் ஸ்ரீயாரூர் இத்சேவர் ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீபண்டாரப் பொத்தகப்படி நிலைவுருக் கண்டு.

  • முதல் இராசேந்திரன், கி. பி. 1018

  • தெ. கல். தொ. 7. கல். 891

  • சேநாபதி முடிகொண்ட சோ விழுப்பரையர்க்காக நாடு கண்காணி நாயகஞ் செய்கின்ற கந்சி சீ காருடையான்

  • (புதுக். கல். 90)