கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிடி-சூழ்ந்து-பிடாகை-நடத்தல் 1 results found)

பிடி சூழ்ந்து பிடாகை நடத்தல்

:
  • அரசன் தானம் செய்த ஊர், கிராமம், நிலங்கள் ஆகியவற்றிற்கமைந்த ஊர்ச்சபைப்பெரு மக்கள், அந்நாட்டார், புரவுவரி கரணத்தான் ஆகியோர் கூடி ஊர் நிலக்கணக்குப்படி நிலங்களை அளந்து, பிடி யானையினை எல்லைகள் வழியே செல்லவிடுத்து அதன்மீது அவ்வூர்ப் பெரு மகனொருவன் ஏறியமர்ந்து எல்லைகளை முறையாகக் காட்டிச் செல்ல தொடர்ந்து யாவரும் எல்லை கோலி, எல்லைகளில் கல்லும் கள்ளியும் நாட்டிச் செய்விக்கும் செயல்.

  • இவ்வானை மங்கலம் பிடி சூழ்ந்து பிடாகை நடக்கிற போது ஆனையேறி இன்னாட்டாரோடும் உடனின்று எல்லை தெரித்துக் காட்டினேன். இவ்வானை மங்கலத்திருக்கும் வெள்ளாளன் கோன் புத்தனேன்

  • ஆனைமங்கலச் செப்பேடு

  • மேல் வேம்பநாட்டு நாட்டாரும் பிர்மதேயக்கிழவரும் நலபுரத்து ஊராரும் உடனின்று நிலம் அளந்து பிடி சூழ்ந்து. கல். நாட்டி

  • (சிவகாசிச் செப்பேடுகள்)