தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (மேலைத்-திருக்காட்டுப்பள்ளி 1 results found)
மேலைத் திருக்காட்டுப்பள்ளி

காவிரி யாற்றினின்று குடமுருட்டியாறு பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள மற்றொரு திருக்காட்டுப்பள்ளியும் பாடல் பெற்றதாகும்.

கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
என்று பணித்தார் திருநாவுக்கரசர். இக் காலத்தில் திருக்காட்டுப் பள்ளியிலுள்ள ஆலயம் அக்கினீசுரர் கோயில் என்ற பெயர் கொண்டு நிலவுகின்றது.