கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (ஸ்ரீகார்யக்-கண்காணி 2 results found)

ஸ்ரீகார்யக் கண்காணி

:
  • நாட்டிலுள்ள திருக்கோயில்களின் காரியங்களைச் செய்து வரும் அதிகாரிகளையும் அவர்களது கணக்கினையும் அரசின் ஆணையின்படி தணிக்கை செய்யும் மேலதிகாரி.

ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம்

:
  • கோயிற் காரியங்களை ஒழுங் காக நடத்துவிக்கும் அதிகாரி ஸ்ரீகார்யம்; ஸ்ரீகார்யம் தவறாமல் நிகழ்வதை ஆராய்பவன் ஸ்ரீகார்யக் கண்காணி; இவர்கள் இருவர் செயலும் குறையின்றி முறையாக நிகழ ஆராய்ந்து தணிக்கை செய்யும் சலைமை அதிகாரி நாயகம். எனவே கோயிற் காரியங்களின் நிர்வாகத் தலைமைத்துறை அதிகாரி ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம் என்று பெயர் பெற்றார்.
    முதல் இராசராசன் காலத்தில், தஞ்சைப்பெரிய கோயிலுக்கு இருந்த ஸ்ரீகார்யக்கண்காணி நாயகம்.

  • பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர் கூற்றத்துப் பாளூர்ப்பாளூர் கிழவன் அரவணையான் மாலரி கேசவன், என்பவனாவன்

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 36