கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (எண்ணெய்ப் பந்தம் 6 results found)

அனுபந்தம்

: உதவி

எண்ணெய்ப் பந்தம்

: இரவில் நடக்கும் கிராமப் பொதுக்காரியங்களுக்கு வாணியன் விளக்கெரிக்க எண்ணெய் கொடுப்பது

தசபந்தம்

: வரியிலே பத்தில் ஒரு பங்கைக் குளம் வெட்டுவது போன்ற பொதுக் காரியங்களுக்காக ஒதுக்குவது; அந்தத் தொகைக்கு ஈடான வருவாயைக் கொடுக்கும் நிலத்தைத் தனியாக ஒதுக்குவது; குளம் முதலிய நீர்நிலைகளை வெட்டுவோர் அதன் ஆயக்கட்டில் பத்திலே ஒரு பங்கை அனுபவிப்பதுமாகும்; தசவந்தம் எனவும் பெறும்

திருவீதிப்பந்தம்

: சுவாமி புறப்பட்டு வீதிவலம் வரும்போது பிடிக்கும் தீவட்டி

நிபந்தம்

: கோயில் நிர்வாகத்திற்கான திட்டம்

நிலைப்பந்தம்

: தெருக்கோடி போன்ற குறிப்பிட்ட இடங்களில் இரவு நேரத்தில் வெளிச்சம் கொடுப்பதற்கென நிரந்தரமாக அமைக்கப்பட்ட பந்தம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (எண்ணெய்ப் பந்தம் 2 results found)

எண்ணைப்பந்தம்

:
  • செக்கில் எண்ணெய் ஆட்டுபவர்கள் தொழில் முறையில் எண்ணெய் தெளிய தீப்பந்தமிடுவதற்கு இடும் வரி. பந்தம் காட்டாத எண்ணெய் தூயதாகும்.

நிபந்தம்

:
  • திருக்கோயில்களில் வேதாகம விதிப்படி வழிபாடு முதலான செயல்கள் தான் நியமித்தவாறு நிகழ்தற்குரிய கட்ட ளைச் செலவினங்கட்கமைந்த வருவாயாகவும் மூலதனமாகவும் நிறுவப்பெறும் அறச்செயல். இச்சொல் கல்வெட்டுக்களில் நிமந் தம் என்றும் குறிக்கப்பெறுகின்றது. நிலமாகவும், வருவாயாகவும், வரியாகவும், காசாகவும் இருக்கும். கடமையைச் செய்தார் பெறும் கூலியும் நிபந்தம் என்று குறிக்கப்பெறும்.

  • கூத்தாடும் தேவர்க்கும் இவர் நம் பிராட்டியார்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கும். பிரமாணம் பண்ணிக் குடுத்த - பாடகம்
    (நிலம்) நிவந்தம் பார்க்க.

  • தெ. கல். தொ. 5. கல். 294

  • இடபவாஹன தேவர்க்கும் நம் பிராட்டியார்க்கும் திருமஞ்சனப் படிகளுக்கும், திருவமுது படிக்கும் வேண்டும் நிபந்தங்களுக்கு நிபந்தம் செய்து குடுத்தோம்
    பூதநாதர் புற்றிடங்கொள் புனிதர்க்க முதுபடி முதலாம் நீதிவளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் மீது த ழ இருந்தமைத்தான் வேதா. ம நூல் விதி விளங்க

  • (பெரிய புராணம். நமிநந்தியடிகள் - பாடல் - 19)

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (எண்ணெய்ப் பந்தம் 8 results found)
Word Book Name TNARCH Data Page

தெரு பந்தம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3187 104

தேசபந்தம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3190 110

திருக்குமரப் பந்தம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 196 197-4

திருவீதிப் பந்தம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 196 197-3

திருக்குழாய்‌ பந்தம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 197 198-3

திருவீதிப் பந்தம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 200 201-7

பந்தம்பிடி கூலி

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 200 201-7

திருக்குழாய்‌ பந்தம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 249 250-16